பக்கம்:வாழும் தமிழ்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வாழும் தமிழ்

மன்னரால் வரிசை பெற்றவர்களுக்கு மக்களும் மதிப் பளித்தனர். சிறப்பான பட்டப் பெயரை அரசன் தருவான். அப்படி வழங்கப் பெறும் தமிழ் மகன் உண்மையிலே அந்தப் பட்டத்துக்கு உரியவகைவே இருப்பான். மக்கள் இருதய உணர்ச்சியை அறிந்த மன்னவன் அவர்களுடைய விருப்பத்தை நிறை வேற்றும் தனிப்பிரதிநிதியாக இருந்தான். -

இவ்வாறு அரசன் வழங்கிய பட்டங்கள் பல ஏளுதி, கம்பி, பெருநம்பி, காவிதி, எட்டி என்பன போலப் பல பட்டங்களே அக்காலத்து மன்னர்கள் வழங்கினர். இந்தப் பட்டங்களுக்குரிய அடையாளங் களாகப் பொற்பூ முதலியவற்றையும் அளிப்பது வழக்கமென்று தெரிகின்றது.

ஏளுதி என்ற பட்டம் சேஞபதிகளுக்கு அரசன் வழங்குவது. இந்தப் பட்ட்ம் பெற்ற படைத் தலைவனுக்கு ஒரு மோதிரமும் வழங்கப்பெறும். பழங் காலத்தில் இருந்த நாயன்மார்களில் ஒருவராகிய ஏளுதிநாதர் இந்தப் பட்டம் பெற்றவரே.

காவிதி என்ற பட்டம் ப்ாண்டிய மன்னர்கள் தம்முடைய அமைச்சர்களுக்கும் வேளாளப் பெரியவர் களுக்கும் அளித்து வந்தது. மதுரைக் காஞ்சி என்ற பழைய நூலில் மதுரையில் இருந்த காவிதிப் பட்டம் பெற்ற அமைச்சர்களைப்பற்றிய செய்தி வருகிறது. அவர்கள் கலேயிலே தலைப்பாகை கட்டியிருப்பார்கள். அறமும் அன்பும் உடையவர்கள். பழிக்குப் பயப் படுகிறவர்கள். நடுநிலையில் பிறழாதவர்கள். இப்படி அமைச்சர்கள் இருந்தால் நாடு இன்ப வாழ்வு அடைவ தற்குத் தடை என்ன? இத்தகைய நேர்மையான கடை உடையவர்களாக இருந்தனர் மதுரைக் காவிதி மாக்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/85&oldid=646099" இலிருந்து மீள்விக்கப்பட்டது