பக்கம்:வாழும் வழி.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வாழும் வழி


மதிப்பிட்டுவிடமுடியாது. மேலும் ஓரளவு வயதுமுதிர்ந்த சிறுவன், மற்றைய பிள்ளைகள் வெறித்துப் பார்க்கப் பார்க்க, தான் அவர்கள் எதிரில் உயர்ந்த தின்பண்டம் தின்பதிலும், சிறந்த வெடி (பட்டாசு) வெடிப்பதிலும், விலையேறப் பெற்ற விளையாட்டுப் பொருள்கள் வைத்துக்கொண்டு விளையாடுவதிலும், மதிப்பிற்குரிய ஆடையணிகள் அணிவதிலும் விறு விறுப்புக்கொண்டு வெற்றி மாலை சூடுகிறான். இன்னுஞ் சில்லாண்டுகள் சென்றதும், முறையே விளையாட்டிலும் கல்வியிலும் மற்றைய மாணவரை வெல்ல விரும்புகின்றான். அடுத்து, நடையாலும், உடையாலும், அழகாலும், ஆற்றலாலும் மற்றைய இளைஞரினும் தானே கன்னியரின் கண்களைக் கவர்ந்து வாகைசூட வேண்டுமென்று விறுவிறுக்கின்றான். பின்னர் தொடர்ந்து பட்டம் பதவி, அரசியல் முதலியவற்றில் ஏனையோரினுஞ் சிறந்து செல்வத்தில் புரண்டு செம்மாந்திருக்கக் கனவு காண்கிறான். கனவு நனவாகி வாகைமேல் வாகை வகைவகையாக வருவதும் உண்டு. எல்லா ஆட்டபாட்டங்களும் அடங்கிய காலத்து, யேசுவைப்போல், புத்தரைப் போல், காந்தியைப்போல் மாநிலம் மதிக்கவேண்டுமென்று விரும்பி அதற்குரிய நாடகமேடையில் ஏறி நடிக்கத் தொடங்கிவிடுகிறான்.

மனிதனின் இத்தகு வியத்தகு செயல்களுள் எது பழமை? எது புதுமை? எது தாழ்ந்தது? எது உயர்ந்தது? இவையெல்லாஞ் சரிநிகர் சமன். இவற்றுள் ஒன்றுக் கொன்று உயர்வுதாழ்வு கற்பிப்பது கற்பனைமட்டுமன்று: ஆராய்ச்சியின்மையால் நேர்ந்த தவறுமாகும். ஏன்?

காந்தியண்ணலையே எடுத்துக்கொள்வோம். அவர் இளமையில் இயற்றிய செயல்கள் எளியனவாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/112&oldid=1110763" இலிருந்து மீள்விக்கப்பட்டது