பக்கம்:வாழும் வழி.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

வாழும் வழி



நிலத்தை உழுவது எதற்காக மழை தூறத் தூற, உழவர்கள் கலப்பை கொண்டுசென்று நிலத்தை உழுது உழுது வைக்கும் வழக்கம் காலங்காலமாக இருக்கிறதே. அஃது ஏன்?

விதை முளைத்துப் பயிர் நன்கு விளைவதற்கு, தண்ணீர், காற்று, வெப்பம் முதலிய புறச் சூழ்நிலைகளைப் போலவே, மண்ணும் தரமுடையதாக இருக்க வேண்டியது மிக இன்றியமையாததாகும். மண்ணில் பலவகை உலோக உப்புக்கள் உண்டு. அவற்றின் ஊட்டத்தால் பயிர் செழித்து வளரும். உயிராற்றல் (வைட்டமின்கள்) குறைந்தவர்களுக்கு, அவ் வாற்றலுடைய குளிகைகள் (வைட்டமின் மாத்திரைகள்) வாயிலாக அவ்வாற்றலை ஈடு செய்தல் போல, தேவையான உப்பு ஆற்றல் (உப்புச் சத்து) குறைந்த நிலத்தில் எருக்களையும் உரங்களையும் போட்டு ஈடு செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், எரு தேவை யில்லாமலேயே இயற்கை முறையில் நிலத்தில் உப்பு ஆற்றலைப் பெருக்குவதற்கு வழியிருக்கிறது. அதுதான் ஏர் உழுதல் ஆகும்.

ஏர்உழுவதால் நிலத்தின் உப்பு ஆற்றல் பெருகுவது எப்படி? ஞாயிற்றின் (சூரிய) ஒளிபடுவதன் வாயிலாக, மண்ணில் உப்பு ஆற்றல் நன்கு உருவாகிறதாம். கதிரவனின் திருவிளையாடலே ஒரு பெருவிளையாடல் அல்லவா? பகலவனது ஒளியின் உதவியின்றி உலகம் நடப்பதெப்படி - உயிர்கள் தோன்றி வாழ்வதெவ்வாறு? கதிரொளி குறைந்த துருவப் பகுதிகளில் உயர் வாழ்க்கை அரிது என்பது அனைவரும் அறிந்த செய்தியே. எல்லா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/134&oldid=1112378" இலிருந்து மீள்விக்கப்பட்டது