பக்கம்:வாழும் வழி.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வாழும் வழி


மாட்டார்கள். பயனின்றியும் அனுப்பமாட்டார்கள். உணவு படைத்து உளங்குளிரச் செய்வார்கள். அது மட்டுமா? தம் தகுதிக்கேற்பப் பெண் யானைகளை அணிகலன்களால் அலங்கரித்து அவற்றைப் பரிசாக அளிப்பார்கள். அத்தகைய உயர்ந்த மனப்பான்மை நிறைந்த உறவினர்களையும், குடிமக்களையும் உடையவர் கண்டீரக்கோ, ஆதலின் அவரைப் பாராட்டினேன். நீயோ, பெண் கொலை புரிந்த நன்னன் மரபினன். பாடும் புலவர் நின்னைக் காண வரின் நின் கோட்டை அடைத்த கதவோடு அவர்கட்குக் காட்சியளிக்கும். ஒருவரும் உள்ளே புகவே முடியாதென்றால் பயன்பெறுவது எப்படி? அதனாலேயே என் போன்றோர் உன் போன்றோரை எப்போதுமே பாராட்டுவதில்லை” என்று கூறி முடித்தார் புலவர். இவ் வரலாற்றை, அப்புலவர் பாடிய

“பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
விண்டோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின் இழையணிந்து
புன்தலை மடப்பிடி பரிசி லாகப்
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீரக் கோன் ஆகலின் நன்றும்
முயங்க லான்றிகின் யானே பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற் கொத்தனை மன்னே வயங்கு மொழிப்
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடுமழை
அணங்குசால் அடுக்கம் பொழியுநும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/22&oldid=1107009" இலிருந்து மீள்விக்கப்பட்டது