பக்கம்:வாழும் வழி.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வாழும் வழி



எல்லா நாட்டினரும் இதில் சேரமாட்டார்கள்; சேர்ந்தாலும் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஒத்துழைக்க மாட்டார்கள் என்று ஏன் ஐயப்படுகிறேன் என்றால், இப்போது உலகம் தெனாலிராமன் வளர்த்த பூனையாகிவிட்டது. அவன் சூடான பாலை பூனைக்கு வைத்தானாம். குடித்ததும் பூனையின் வாய் வெந்து போயிற்றாம். அதிலிருந்து ஆறிய பாலை வைத்தாலும் அது குடிப்பதில்லையாம். ஆலமரத்தில் தொங்கிய பாம்பை விழுது என்று எண்ணிப்பிடித்துப் பயந்துபோன குரங்கு, மறுபடி உண்மையான விழுதை - ஏன் தன் வாலையே பார்த்துப் பாம்போ என அஞ்சுவது இயற்கைதானே! இவ்வெடுத்துக்காட்டுகளின் பொருத்தத்தைச் சிறிது ஆராய்வோம்.

இந்த ஐ.நா. இரண்டாவது உலகப் போரின் பின்புதானா ஏற்பட்டது? இல்லையில்லை. முதல் உலகப் போர் முடிந்ததுமே ஏற்பட்டுவிட்டது. அப்படியாயின், இரண்டாவது உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது இது என்ன செய்தது? அப்போர் வராமல் ஏன் நிறுத்தவில்லை? வந்தவுடனேதான் ஏன் நிறுத்தவில்லை? அணுகுண்டு வந்துதானா நிறுத்த வேண்டும்? தன் ஆற்றலை அணுகுண்டுக்கு அளித்துவிட்டதா? என்ற கேள்விகள் எழும். இதனைச் சிறிது விரிவாக நோக்குவோம்:

முதல் உலகப் போர் முடிந்ததும் பாரிசில் ‘சமாதான மகாநாடு’ கூடியது. அதன் பயனாகவே ‘உலக ஒற்றுமைக் கழகம்’ உருவாயிற்று. உலக மக்கள் ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/28&oldid=1104145" இலிருந்து மீள்விக்கப்பட்டது