பக்கம்:வாழும் வழி.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

37


காடு அல்லவா? அதனால் அவன் வறிதே விட்டானா? இல்லை? உணவு தயாரிக்கத் தொடங்கினான். தன்னுடன் வந்த வேலையாட்கள், வேட்டை காரணமாகப் பல மூலை முடுக்குகட்குப் பிரிந்திருந்தனர். இருப்பினும், அவன் சிறிதும் பின் வாங்கவில்லை. தானே உணவுப் பொருளைத் தேடினான். தீக்கடைக் கோலால் நெருப்பு மூட்டினான். நெருப்பின் உதவியால் உணவு தயார் செய்யப்பட்டது. புலவர் குடும்பம் உண்டு பசி நீங்கி அருவியில் நீர் பருகி இன்புற்றது. அவ்வின்பத்தைக் கண்டு அரசனும் இன்புற்றான்.

பின்னர், புலவர் அரசனுக்கு நன்றியும் வணக்கமும் செலுத்திப் புறப்படத் தொடங்கினார். அவ்வளவில் அனுப்பிவிடுவானா அவன்? பசியைப் போக்கியாயிற்று. ஒரு சிறிதாவது ஏழ்மையினையும் போக்க வேண்டும் அல்லவா? தான் அணிந்துகொண்டிருந்த அணிகலன்களை கழற்றித் தந்தாள். தந்து, “புலவரீர் நான் இப்போது இருப்பது அரண்மனையன்று, நடுக்காடே என்பதை நீவிர் நன்கு அறிவீர்கள் ஆதலின் இவ்வளவுதான் அடியேனால் செய்ய முடிந்தது. இன்னும் சிறந்த உதவிகளைச் செய்ய இயலாது போனமைக்கும் பெரிதும் மன்னித்தருள வேண்டுகிறேன்” என்று விண்ணப்பமும் செய்து கொண்டான். ஆ! அவன் பெருங் கொடைத்திறனை என்னென்று புகழ்வது!

அந்த வள்ளலின் வரலாற்றை அறிந்துகொள்ளப் புலவர் பெரிதும் ஆவல் கொண்டார். அவனை நோக்கி, “அரசே நுமக்குரிய நாடு யாது?” எனப் பணிவுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/39&oldid=1104804" இலிருந்து மீள்விக்கப்பட்டது