பக்கம்:வாழும் வழி.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

49


(8) பொருட்பால் ஏழு பிரிவுகளையுடையது. (22- தொடித்தலை விழுத்தண்டினார், 26, போக்கியார்) ஆனால் உரையாசிரியர்களுன் மணக்குடவர் ஆறு பிரிவாகவும், பரிமேலழகர் மூன்று பிரிவாகவும் பிரித்துக் கொண்டுள்ளனர். பிரிவு இயல்களின் பெயர்களும் ஒருவர்க்கொருவர் வேறுபடுகின்றன.

(9) காமத்துப்பால் மூன்று பிரிவுகளையுடையது. (22 - தொடித்தலை விழுத்தண்டினார், 27 - மோசிகீரனார்). ஆனால், உரையாசிரியர்கள் இருவரும் இரண்டாகப் பிரித்துள்ளனர். பிரிவுகளின் பெயர்களும் வெவ்வேறானவை.

இவ்வாறு இன்னும் மாறுபட்ட பல்வேறுவகைக் கருத்துக்களைப் பழைய புலவர்கள் வெளியிட்டுள்ளனர். இதனால் தெரிவது என்ன? திருவள்ளுவரால் எழுதிப் போட்டுவிடப்பட்டுப்போன திருக்குறள் ஒரு நேரம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திருக்கிறது. அதன் அமைப்பு முறையில் பலரும் தத்தம் கைவண்ணங் காட்டியிருக்கின்றனர் - என்பது வரையும் நன்கு புரிகின்றதன்றோ?

பால்களின் அமைப்பில் மட்டுந்தானா வேறுபாடு? பாலின் உட்பிரிவாகிய இயல்களின் அமைப்பில் மட்டுந்தானா வேறுபாடு? இயலின் உட்பிரிவாகிய அதிகாரத்திலும் வேறுபாடு காணக்கிடக்கின்றது. (அதிகாரம் என்பது, பத்துக் குறள்கள் கொண்ட ஒரு தலைப்பு) ‘புதல்வரைப் பெறுதல்’ என்று சிலரும் அதனையே ‘மக்கட்பேறு’ என்று சிலரும் கூறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/51&oldid=1104976" இலிருந்து மீள்விக்கப்பட்டது