பக்கம்:வாழும் வழி.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வாழும் வழி



மொழி பிரிந்ததற்குப் பல காரணங்கள், மேலே கூறப்பட்டிருப்பினும், எல்லாவற்றினும் இன்றி யமையாததான மற்றொரு காரணமும் உண்டு. பண்டைய மக்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கண முறையைப் பின்பற்றாமைதான் அக்காரணமாகும்.

பேச்சு வழக்கில் பின்பற்ற முடியாது போயினும், எழுத்து வழக்கிலாவது ஒரேவிதமான இலக்கணத்தைப் பின்பற்றி ஒரே விதமாக எழுதி வந்திருப்பார்களேயானால், அப்பழக்கம், பேச்சையும் ஓரளவு கட்டுப்படுத்தி, மொழி பிரிந்து சிதையாமல் இருக்கச் செய்திருக்குமல்லவா?

உலகம் முழுவதும் பெரும்பாலும் ஒரே விதமான இலக்கணத்தைப் பின்பற்றி ஆங்கிலத்தை எழுதுவதாலேயே, சீனன் எழுதும் ஆங்கிலத்தை இந்தியனும், இந்தியன் எழுதும் ஆங்கிலத்தை ஐரோப்பியனும் புரிந்துகொள்ளும்படியாக அம்மொழி ஒத்துள்ளதன்றோ? ஐரோப்பியன் எழுதும் ஆங்கிலத்திற்கு ‘இங்லீஷ்’ என்றும் ஆசியாக்காரன் எழுதும் ஆங்கிலத்திற்கு ‘கிங்லிஷ்’ என்றும் பெயர் வேறுபாடு இல்லையே!

இம்முறையைப் பண்டுதொட்டு நம் தென்னிந்தியரும் பின்பற்றி வந்திருப்பாரேயாயின் நான்கு மொழியினராகவும் - இனத்தினராகவும் பிரிய வேண்டியது வந்திராதே!

“போனது போயிற்று, பிள்ளையாரே வாழி” என்று ஏற்றப் பாட்டு பாடுவார்கள். அதுபோல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/84&oldid=1107795" இலிருந்து மீள்விக்கப்பட்டது