பக்கம்:வாழும் வழி.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வாழும் வழி


நாடு என்னும் பொருளில், ‘எங்கள் தமிழ் - எங்கள் நாடு’ எனப் பேசுவது யாழ்ப்பாணத்தார் (சிலோன்) வழக்காறு. சென்னைத் தமிழோ நாடறிந்த ஒன்று. கீது, இஸ்துகினு, பேஜாரு முதலியன சென்னைத் தமிழின் சிறப்பு வளமாம்?!

இந்த வட்டார வழக்காறுகளை, நான் வெளியூர்க் கல்லூரிகளில் படித்த காலத்தும் ஆசிரியனாயிருந்த காலத்தும் பல மாவட்டத்து மாணவர்களோடு பழகியதால் அறிய முடிந்தது. இன்னோ ரன்னவை, அவ்வம் மாவட்டத்துப் பெரும்பான்மை மக்களின் வழக்காறுகளாகும். வெளி மாவட்டக்காரர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, ‘நீங்கள் இன்ன ஊர்க்காரரா?’ என்று கேட்கும் பழக்கம் - அது நல்லதோ கெட்டதோ - எப்போதுமே எனக்குண்டு. சிற்சில நேரங்களில், ஒருவரது நடையுடை தோற்றத்தைக் கொண்டும், அவர் இன்ன இடத்தார் என்று சொல்லிவிட முடியும். சாதிப்பட்டத்துடன் கூடிய பெயரைக் கொண்டே கூட சிலரது மாவட்டத்தை அறிந்து கொள்ளவும் முடியும்.

பிறருடைய மாவட்டங்களை வினவும் வேட்டைக்காரனாகிய யான், ஒருமுறை ஒருவரிடம் அகப்பட்டுக் கொண்டேன். தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆடுதுறை புகைவண்டி நிலையத்திற்கு அருகில், அணைக்கரை செல்லும் (பஸ்) வண்டிக்காக ஒருநாள் நான் காத்து நின்றேன். வண்டிவர நேரமாகவே பக்கத்திலிருந்த ஒரு கடைக்காரரிடம் போந்து, எனது கைப்பையைத் தந்து, முகம் தூய்மை செய்து வரும்வரையும் அதனைப் பார்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/90&oldid=1108802" இலிருந்து மீள்விக்கப்பட்டது