பக்கம்:வாழும் வழி.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

வாழும் வழி


உண்மையை, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் காணலாம். சலதாரை, வாய்க்கால் என்பன போல, தண்ணீர்க் குழாயும் நீர்வரும் பொருள் தானே இச்சொல் புதுவை வழக்காறாகும்.

புதுச்சேரியைப் போலவே மற்றொரு முன்னாள் பிரஞ்சிந்தியப் பகுதியாகிய காரைக்காலில், தண்ணீர்க் குழாயை, பீலி என்று அழைக்கின்றனர். இதன் அகராதிப் பொருள் நீர்த்தொட்டி என்பதாகும்.

புதுச்சேரி தென்னார்க்காடு மாவட்டத்திற்குள் அமைந்திருப்பினும், அது சில காலம் பிரெஞ்சு ஆட்சியின் கீழே தனித்திருந்ததாலும், இப்போது இந்திய ஆட்சியின் கீழே புதுவை மாநிலம் (State) என்னும் தனி மாநிலத்தின் தலைநகரமாயிருப்பதாலும் ஒருவகைத் தனிச் சிறப்புடையதாகும். எனவே, புதுச்சேரி வட்டாரத்தில் வழங்கும் சில சொல்லாட்சி வழக்காறுகளை ஈண்டு காண்போம்.

புதுவைத் தமிழக - புதுச்சேரி வழக்காறுகளை ஈண்டு கொடுக்கப்படுவனவற்றை, புதுச்சேரியினரை விட, பிற ஊர்க்காரராலேயே தம்மூர் வழக்காற்றினின்றும் பகுத்துணர முடியும் பிரித்துணர வியலும். இளமைக் காலமெல்லாம் கடலூரிலும் பிற ஊர்களிலும் வளர்ந்து வாழ்ந்து, இடைக்காலத்தில் புதுவையின் புதுமையான சில வழக்காறுகளைக் கேட்டு வியந்தேன். இதனை இங்கே ஏன் எழுதுகிறேன் என்றால் புதுவைக்குத் தெற்கே பதினைந்தாவது கல் தொலைவிலுள்ள கடலூரில் வளர்ந்த நான், கடலூர் வழக்காற்றினின்றும் புதுவை வழக்காற்றில் புதுமை கண்டதனாலேயாம். அண்மையில் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/92&oldid=1109551" இலிருந்து மீள்விக்கப்பட்டது