பக்கம்:வாழையடி வாழை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

‘வாழையடி வாழை’

'யாரது?’ என்று கேட்க
யானுமிக் கவிகள் சொன்னேன்.'

என்று தம்மை அடக்கத்தோடு அறிமுகப்படுத்திக் கொள்கிறார்,

இனி, இவரது கவிதையின் பெற்றியினைக் காண்போம்:

“தமிழன் இதயம்’, ‘சங்கொலி’, 'காந்தி அஞ்சலி’, தமிழ்த்தேன்' முதலியன இவருடைய கவிதை நூல்கள். ‘அவனும் அவளும்' என்பது இவர் இயற்றிய காவியம். இவரது வரலாறு கூறும் நூல், 'என் கதை’ எனப்படுவது. 'இலக்கிய இன்பம்’ என்பது இவர் எழுதிய இலக்கியக் கட்டுரைத் தொகுதி. திருக்குறளுக்குப் புத்துரை எழுதியிருக்கும் கவிஞர், நல்ல நாவலாசிரியருமாவர். இவர் எழுதிய மலைக்கள்ளன்’ என்னும் நாவல் திரைப்படமாய் வந்து, மக்களுடைய பாராட்டுதலினையும், மத்திய அரசினரின் பரிசினையும் ஒரு சேரப் பெற்றது. ஏறத்தாழ முப்பது நூல்களை இவர் எழுதியுளளாா.

'தமிழன் இதயம்' என்னும் நூலில் தமிழினப் பெருமையினைத் தரணிக்குப் பறை சாற்றுகின்றார் கவிஞர்:

'தமிழன் என்றாெரு இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடை மொழியாகும்;
அன்பே அவனுடை வழியாகும்’

எளிய சொற்களைக் கொண்டு உயரிய எண்ணங்களை உருவாக்குகின்றார் கவிஞர் என்பதனை இப்பாடல்களைப் படிப்பவர் உணர்வர்.

நாத்திக வாடை நாட்டிலே தலை விரித்தாடி நிலையில், கவிஞர் அவர்கள் இறைவன் இருப்பை விளக்கி, எல்லா மதத்தவரும் இனிது வாழ வேண்டிய வழியினை வகையுற எடுத்து மொழிகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/110&oldid=1461284" இலிருந்து மீள்விக்கப்பட்டது