பக்கம்:வாழையடி வாழை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரசர் கண்ணதாசர் 137

'வாட்டி என வருத்தி மறைந்தாயோ மாங்கனியே’

என்று அடலேறு மனம் மாழ்குகின்றான்.

இறுதியில் இவர்கள் காதல்,

காற்றோடு குரல்கலந்தது கண்மூடி உயிர்பறந்தது
ஆற்றாேடு எழில் மறைந்தது ஆனாலும் பொழு தலர்ந்ததே!

என்றபடி,

'தென்னரசி அடலேறு, மாங்க னிப்பெண்
சேர்ந்தே உயிர்நீத்த கதை.”

இதுவென்று 'மாங்கனிக் காவியம்’ முடிகின்றது.

'ஆட்டனத்தி ஆதிமந்தி' என்னும் காவியமும் காதற் சுவை கெழுமியது: அவல முடிவு கொண்டது. அழகன் ஆட்டனத்தி, அழகி ஆதிமந்தியை விரும்புகிறான். இவர் இருவரும் கலை வெறியோடு காதல் வெறியும் கொள்கின்றனர். பின்னர்,


'மனிதமனம் காமத்தில் ஆழ்ந்து நின்றால்
மற்றெதையும் நினைக்காதே! ஓரிராவில்
பனிமலரைக் கதிர் கண்டு பையப் பையப்
பைங்குழலிற் சரம்போடும்; சுருதி கூட்டும்!”

என்றபடி மனத்தால் இணைந்தன. காதலிற் கட்டுண்ட நெஞ்சங்களுக்கு இடையில் பிரிவு வருகிறது, துடித்துப் போகிறாள் தோகை மயிலாள்!

'நாளேற ஏறஉடல் மூப்பி லேறும்;
நரையேறும்! நோயோடு நலிவுஞ் சேரும்:
வாளேறும்! விழியாரின் காதல் மட்டும்
வயதேற ஏறஇளம் பருவத் தேறும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/139&oldid=1461306" இலிருந்து மீள்விக்கப்பட்டது