பக்கம்:வாழையடி வாழை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 67


சங்க இலக்கிய மரபு, 'அகம், புறம்' என்ற இரு துறைகளைத் தழுவியதாகும். இயற்கையின் பின்னணியிலே மக்கள் வாழ்வினைத் திறம்படச் சங்கக் கவிஞர்கள் இலக்கியமாக வடித்துத் தந்துள்ளார்கள். பின்னணியினைத் துறந்து வாழாத ஓவியம் போன்று, இயற்கையின் பின்னணியில் பொலிந்த சங்கப் பாடல்கள் கவிஞர்தம் நெஞ்சைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும். மேலை நாட்டிலே 'வேர்ட்ஸ்வொர்த்து’ என்னும் கவிஞரைக் குறிப்பிடும் பொழுது, இயற்கையே எழுதுகோல் பிடித்துக் கவிஞருக்குப் பதிலாகக் கவிதை புனைந்து' (Nature itself wrote for him) என்பர். இக்கூற்று நம் கவிஞரைப் பொறுத்த வரையில் முற்றும் பொருந்துவதாகும். •

“இயற்கை அனைத்தும் அழகே. அந்த அழகு செந்தாமரை என்றும், நிலவென்றும், கதிரென்றும் சிரித்தது. காணும் பொருளிலெல்லாம் அழகைக் காணவும் கண்டவாறு தாமே சொல்லோவியம் தீட்டவும் திறம் பெறுதல் வேண்டும். தமிழர்கள் பிறமொழி, தமிழ் மொழி நூல்களில் பார்த்தபடியே எழுதும் நிலை தீர வேண்டும். அதற்கு இச்சிறு நூல் இய்றறிய வாயிலாக நான் இதை அறிஞர்க்கு நினைவுறுத்துகிறேன்" என்று கவிஞர் 'அழகின் சிரிப்பு' என்னும் நூலின் முன்னுரையில் சிந்தனையோடு குறிப்பிட்டுள்ளனர்.

'அழகுப் பொருள்கள் என்றும் அழியாத இன்பம் நல்கும்’ (A thing of beauty is joy for ever) என்று கீட்ஸ்' என்னும் கவிஞர் பெருமான் குறிப்பிட்டார்.

பாரதிதாசனுருக்கும் அழகே கவிதை தருகின்ற தாம்:

‘காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்
கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்; அந்தச்
சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப்பட்டாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/69&oldid=1461246" இலிருந்து மீள்விக்கப்பட்டது