பக்கம்:வாழையடி வாழை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

‘வாழையடி வாழை’

வணி' என்பர். கவிஞர் நீண்ட கழுத்துடைய மயிலோடு பேசும் பேச்சில் நகைச்சுவை கொப்பளிப்பதனைக் காணலாம். ஊடே ஓர் உளவியல் உண்மையையும் அவர் உணர்த்துகின்றார்.


நீயும் பெண்களும் நிகர்என் கிறார்கள்:
நிசம் அது! நிசம்! நிசம் நிசமே யாயினும்
பிறர்பழி தூற்றும் பெண்கள் இப் பெண்கள்;
அவர்கழுத்து உன் கழுத் தாகுமோ சொல்வாய்!
அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பாரா திருப்ப தற்கே
இயற்கை அன்னை, இப்பெண் கட்கெலாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ
கறையொன் றில்லாக் கலாப மயிலே;
நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்!
இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்,
மனத்திற் போட்டுவை, மகளிர் கூட்டம்
என்னை ஏசும் என்பதற்காக!’

பாரதிதாசன் கவிதை 1: மயில்


காவடிச்சிந்து மெட்டிலே காடு பற்றிக் கவிஞர் பாடியுள்ள பாட்டு, ஒலி நய மிக்கது; சந்த இன்பம் தருவது. சான்றாக.

'முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்!—எதிர்
முட்டுகருங் கற்களும்நெ ருங்கும்—மக்கள்
இட்டடி எடுத்தெடுத்து வைக்கயிலே
கால்களில்த டுக்கும் —உள்
நடுக்கும்,’

இப் பாடலைக் காண்க.

'கண்ணும் நெஞ்சும் கவர்கின்ற கடலை, வானைக் கவிஞர்கள் அந்நாள் 'வண்ணமயில் வேலோன்' என்றார்கள் என்று இவர் குறிப்பிடும் நயம் பாராட்டற்குரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/76&oldid=1461253" இலிருந்து மீள்விக்கப்பட்டது