பக்கம்:வாழையடி வாழை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

‘வாழையடி வாழை’


கணவன் 'காலிற் செருப்பணிந்து கைக்குடையை மேல் விரித்து, மேலும் ஒரு தடவை மெல்லி முகம் தான் நோக்கிச் சென்றான். அவன் செல்லும் அழகருக்தி நின்றாள் அன்னம். பின் நெஞ்சுருகித் திரும்பினாள்.

முன்பு கற்ற அவள் இப்பொழுது திருமணத்திற்குப் பின் கற்பிப்பவள் ஆனால். அற்றைகாள் மகளாய் இருந்தவள் இன்று அன்னை ஆகிவிட்டாள்.

'தலைமட்டும் இரண்டென் றாலும்
குழந்தையும், தாயும் ஒற்றைக்
குலையேயாம், உயிரும் ஒன்றே!
உள்ளத்தின் கூறும் ஒன்றே!'

'காக்கா காக்கா’ காட்டிக் குழந்தைக்குச் சோறுாட்டுகிறாள் தாய். அவள் பாடும் பாடலில்தான் என்ன கருத்தாழம்!

“உன்வாய் பெரிய ஒளிவாயாம்;
ஒண்டொடி வாய்தான் கிளிவாயாம்;
தன்னால் உண்ணும் என்தங்கம்
தண்ணிர் குடிக்க வாஅஞ்சும்?
சொன்னால் கேட்கும் என்பட்டும்
சோற்றை உண்ணும் இம்மட்டும்
இன்னும் காக்கா நெருங்கிவா
இதையும் உண்டு பறந்துபோ.’/b>

—குடும்ப விளக்கு: நான்காம் பகுதி.


இப்படி இன்பமாக அன்பின்அடித்தளத்தில் அமையும் இல்லற வாழ்க்கை இளமைக் காலத்தில் மட்டுமன்றி முதுமையிலும் மகிழ்ச்சி மண்டிக் கிடப்பதாகவே இலங்குகிறது. வயது முதிர்ந்த கணவன் தன்னைப் போலவே முதிர்ந்த நிலையிலிருக்கும் தன் மனைவி பற்றிக் கூறுவான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/90&oldid=1461266" இலிருந்து மீள்விக்கப்பட்டது