பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

இவையிவை எனத் தெ ரி வாக விளக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தமிழிலக்கிய மேற்கோளுடனும் ஆசிரியர் தம் கருத்தை விளக்க முயன்றிருப்பது நூலின் சுவையை மிகுவிக் கின்றது. மக்களிடம் கிலவி வரும் தவறான நம்பிக்கைகளை எடுத்துக்காட்டி உண்மைநிலை இன்னது என்பதை அவர் விளக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இத் துறையில் மார்க்கனும் மெண்டலும் கண்டறிந்த பேருண்மைகள் (பக். 74-81) தெளி வாக்கப்பெற்றுள்ளன. இரட்டைப் பிறவிகள், இரண்டுக்கு மேற்பட்ட பிறவிகள் (Multiple births), கொடிய நோய்கள். மரபு வழியாகப் பெற்றோரிடமிருந்து தம் கால்வழியினருக்குப் பரவும் முறைகள், மெல்லியலார்’ எனப்படும் மகளிரே உண் மையில் வல்லியலார்’ என்ற கருத்து (பக் 167.8), செயல் சார்ந்த குறைபாடுகள், நோய் மனமுடையோர், மந்த மன முடையோர், இரண்டுங் கெட்டான்கள்’, குருதி வகைகள், குருதி வகைகளின் பொருத்தம் (பக். 238) போன்ற தலைப்பு களில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் பல சுவையான விளக்கம் பெறுகின்றன.

“கொஞ்சம் கில்லுங்கள்!’ (பக். 264) என்ற தலைப்பில் நூல் படிப்போரை ஆசிரியர் சிந்திக்கத் தூண்டுகின்றார். கால்வழியில் புரட்சி என்ற தலைப்பில் (பக். 268) உணவுப் பெருக்கம், தாவர இயலிலும் விலங்கியலிலும் ஒட்டுவகையால் விளைந்த பயன்கள், இந்திய அறிவியலறிஞர்களால் வெளி காடுகளில் கண்டறியப்பெற்ற நுணுக்கமான அறிவியல் உண்மைகள் முதலியன எழிலுற எடுத்துக்காட்டப்பெற்றுள்ள . ஆசிரியர் பல புதிய கலைச்சொற்களைக் கையாண்டிருப்பது தமிழுக்குப் புதிய வளத்தை வழங்குகின்றது. ஒய்வுபெற்ற கிலையிலும் ஓயாது பணியாற்றும் இவர் திறம் சிறப்புடைய தாகும,