பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பெரும் ஆராய்ச்சிகள் 77.

தது ; அதில் தோன்றும் இனங்களைத் தம்மொடு தாமாகச் சேர்த்த தில் அவை சிவப்பு நிறப் பூக்களையே தந்தன. ஏனையவற்றில் கலப்புக் கூறுகளே காணப்பட்டன : அஃதாவது செங்கிறப பூக்களை யும் வெண்ணிறப் பூக்களையும் கலந்து விளைவிததுத் தம்முடைய நேர் பெற்றோர்களையே ஒத்திருந்தன. மீண்டும் மீண்டும் பயிரிட்டு மெண்டல் இம் முடிவுகளைச் சரி பார்த்தார். இதே சமயத்தில் அவர் தம் தோட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் வேறு கூறுகளைக் கவனிப்பதற்காக வெவ்வேறு கலப்பினச் சேர்க்கைகளை உண்டாக் கினார். எடுத்துக்காட்டாக, உயரமாக வளரும் பட்டாணி வகை களைக் குட்டையாக வளரும் பட்டாணி வகைகளுடன் சேர்த்தார் : மஞ்சள் நிறப் பட்டாணி விதைகளைத் தரும் வகையைப் பச்சைநிறப் பட்டாணி விதைகளைத் தரும் வகையுடன் சேர்ததார் : சுருண்ட விதைகளையுடையவற்றை வழுவழுப்பான விதைகளையுடைய வற்றுடன் சேர்த்தார். இவற்றிற்கெல்லாம் சரியான குறிப்புகளை வைததுக்கொண்டு விளைவுகளையும குறித்துக்கொண்டார். இக் குறிப்புகளைக் கொண்டு அவர் கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வநதார். இந்த முடிவுகள் ‘மெண்டலின் விதிகள்’ என்று வழங்கப்பெறு கின்றன.

1. வழிவழியாக இறங்கி வரும் சிறப்பியல்புகள் ஜீன்களால் (இவற்றை மெண்டல் கூறுகள்’’ என வழங்கினார்) உண்டாக்கப்

பெறுகின்றன . இவை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலை முறைக்கு மாற்றமடையாமலேயே இறங்குகினறன.

2. ஒவ்வொரு தாவரத்தினிடமும் இந்த ஜீன்கள் இணை களாகவே காணப்பெறுகினறன ; ஓர் இணையிலுள்ள இரண்டு ஜின்கள் வேற்றுமையுள்ள விளைவுகளை உண்டாக்கக் கூடுமாயின், ஒரு ஜீன்’ மற்றதைவிட முனைப்பாக அமைகின்றது. இ.து “ஓங்கி நிற்கும்’ ஜீன்’ என்றும், மற்றது பின்னிடும் ஜின்’ என்றும் வழங்கப்பெறும்.

8. Qudsorl_666ir 63,54ssir - Mendelian laws. 9. Ga-glsir - Factors. 1 O. onsor&sir - Pairs. 11. Gois, fijth - Dominant. 1 2. URsirsofGih - Recessive.