பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பெரும் ஆராய்ச்சிகள் 8 :

செலுத்தினர்; படிவளர்ச்சி ஏணியில் மனிதன் வரையிலும் ஆராயவும் தொடங்கினர். அந்துப் பூச்சிகள், குழி முயல்கள், ஒருவகைப் பன்றிகள், காய்கள், கால்நடைகள், சுண்டெலிகள் போன்ற பிராணி கள் ஆராய்ச்சிப் பிராணிகளாக அமைந்தன. இங்ஙனம் நூற்றுக் கணக்கான ஆய்வாளர்கள் கண்ட முடிவுகள் திரண்டுதான் ஜீன்களைப் பற்றிய இன்றைய அறிவுக் கருவூலமாக அமைந்துள்ளன. இதற்கு மெண்டலின் பட்டாணிபற்றிய ஆராய்ச்சியும் மார்கனின் பழ ஈக்கள் பற்றிய ஆராய்ச்சியுமே மானிட மரபுவழிபற்றிய சிக்கல்களை அறிவதற்கு வழியமைத்தன.

வா.--ே