பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 13

மெண்டல் கொள்கை-விளக்கம்

சென்ற இயலில் குறிப்பிட்ட மெண்டலின் விதிகளை-மெண் டல் கண்ட மரபுவழிக் கொள்கையை-ஈண்டு விளக்குவோம். மாலை நேரத்தில் மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிறங்களில் பூக்கும் அந்தி மந்தாரையைப் பார்த்திருப்பீர்கள். இவற்றுள் வெள்ளை, சிவப்பு மலர்களைப் பூக்கும் தாவரங்களைக் கொண்டு இக் கொள்கையை விளக்குவோம்.

சிவப்பு, வெள்ளை மலர்களை மகரந்தக் கலப்புச் செய்து அதனால் உண்டான விதைகளைப் பயிரிட்டு அச் செடிகள் தரும் பூக்களைக் கவனித்ததில் அவை வெண்-சிவப்பு நிறமாக இருந்தன. பெற்றோர் இருவரையும் கலந்து வடித்தெடுத்த மாதிரி உள்ளன என்று நாம் வாளா இருந்துவிடுவோம். ஆனால், வெளித் தோற்றத்தைக் கொண்டு மரபுவழியை அறுதியிடலாகாது என்பதை அறிவியலறிஞர்கள் அறிவர். ஆகவே, வெண் சிவப்பு மலர்களில் உண்டான விதையைப் பயிரிட்டு, அச் செடிகளிலுண்டான மலர் களைக் கவனித்தனர். இரண்டாவது தலைமுறையில் வெண் சிவப்பு மலர்கள், சிவப்பு மலர்கள், வெள்ளை மலர்கள் ஆகிய மூன்று வகை மலர்களும் காணப்பெற்றன. இதனைப் படம் (படம்-25) விளக்குகின்றது. இப்பொழுது நம்மிடையே ஓர் ஐயம் எழுகின்றது. இரண்டாவது தலைமுறையில் உண்டான சிவப்பு. வெள்ளை மலர் கள் தூய்மையுடையனவா? இதற்கு முற்பட்ட தலைமுறையின் பண்புகள் யாவும் முற்றிலும் இவற்றினிடம் மறைந்துவிட்டனவா? அஃதாவது, இனிமேல் இம் மலர்களில் உண்டாகும் விதைகள் தம் முடைய வகைப் பூக்களையே உண்டாக்கும் செடிகளைத் தருமா?