பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெண்டல் கொள்கை-விளக்கம் 85

விளக்கம்: வெள்ளை அந்தி மந்தாரைச் செடியோ, சிவப்பு அந்தி மந்தாரைச் செடியோ ஆண், பெண் பால்-அணுக்கள் சேர்ந்து கருவுற்றதனால் தோன்றியவை என்பதை நாம் அறிவோம். (கருவுறுதலைப்பற்றி நாம் அறிந்திருக்கும் செய்திகள் மெண்டல் காலத்தில் அறியப்பெறாதவை). ஆதலால் மரபுவழியாக இறங் கும் பண்பினை விளைவிக்கும் ஏதோ ஒன்று இந்தப் பால்-அணுக் களில் இருக்கவேண்டும் என்று மெண்டல் கருதினார். அந்தி மந்தாரையில் அப் பண்பு நிறம் ஆகும். அந்த ஏதோ ஒன்றினை மெண்டல் மரபுவழிக்கூறு’ என்று வழங்கினார். இன்று அதனை நாம் ஜீன்’ என்று வழங்குகின்றோம். இங்குச் சிவப்பு, வெள்ளை அந்தி மந்தாரையின் இரண்டு பெற்றோரின் பால்-அணுக்களும் ஒரே வகை ஜீனையே பெற்றிருக்க வேண்டும். வெண்ணிற வகைச் செடிகளில் தாய் வழியாக வந்த முட்டையும்’, தங்தை வழி யாக வந்த மகரந்தமும்” வெண்ணிறத்திற்குக் காரணமான ஜீனைக் கொண்டிருக்க வேண்டும். இங்ஙனமே செக்கிற வகைச் செடிகளில் தாய் வழியாக வந்த முட்டையும் தந்தை வழியாக வந்த மகரந்தமும் சிவப்பு நிறத்திற்குக் காரணமான ஜீனைக் கொண்டிருக்க வேண் டும். ஆகவே, கலப்பின வகைச் செடிகள் செந்நிறத்திற்குக் காரண மான ஒரு ஜீனை ஒரு பெற்றோரிடமிருந்தும் வெண்ணிறத்திற்குக் காரணமான ஒரு ஜீனை’ மற்றொரு பெற்றோரிடமிருந்தும் பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. எனவே, ஒரே செடியிலுள்ள செந்நிறத்திற்கும் வெண்ணிறத்திற்கும் காரணமான ‘ஜீன்கள் ஒன்றாகச் சேர்ந்ததன் காரணமாகவே வெண்-சிவப்பு நிறப் பூக்கள் உண்டாகின்றன என்றும் தோன்றுகின்றது.

மேலும், கலப்பினப் பூக்களிடையே தன்-மகரந்தக் கலப்பினை விளைவிதது அதனாலுண்டான செடிகளில் தூய்மையான வெண் னிறப் பூக்களும் செங்கிறப் பூக்களும் திரும்பவும் உண்டாவதைக் காண்கின்றோம். ஆகவே, வெண்ணிறம் (அல்லது செங்கிறம்)

lorus, g54,3n-p) - Hereditory factor. 6r - Gene.

(pl.: sol– – Egg or ovule.

idag shuh - Pollen.