பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வாழையடி வாழை

பெற்றோர்கள் இருவரின் ஒவ்வொரு வெண்ணிற (அல்லது செங் கிற) ‘ஜீனி'ன் விளைவாக ஏற்பட்டதாக இருப்பின், கலப்பினச் செடிகளின் இரண்டுவித பால்-உயிரணுக்களும் வெண்ணிறத்திற்குக் காரணமான ஜீன்களை மட்டிலும் கொண்ட சில பாலணுக்களையும், செந்நிறத்திற்குக் காரணமான ஜீன்களை மட்டிலும் கொண்ட சில பாலணுக்களையும்” உண்டாக்க வேண்டும் என்பது பெறப்படுகின் றது. அஃதாவது, வெண்-சிவப்பு மலர்களைத் தரும் செடிகள் வெண்மையும் சிவப்பும் கலந்த நிறத்திற்குக் காரணமான பாலணுக் களை உற்பத்தி செய்யவில்லை என்றும், ஆனால் அவை வெண் னிறத்திற்குக் காரணமான ஜீன்களையோ, செந்நிறத்திற்குக் காரணமான ஜீன் களையோ கொண்ட பாலணுக்களையே உண்டாக்குகின்றன என்றும் தெரிகின்றது. சுருங்கக் கூறின், கலப்பினச் செடிகளின் பாலணுக்கள் தூய்மையான செங்கிற, வெண்ணிற ஜீன்களையே பெற்றிருக்கின்றன என்று சொல்ல லாம். பால்-அணுக்களின் தூய்மைபற்றிய இந்த விதி மெண்ட லின முதல் கண்டுபிடிப்பு ஆகும்; இதுவே பிறப்பியலின் அடிப் படைக் கல்லாக அமைகின்றது. இதை முற்றிலும் விளக்க வேண்டுமாயின் இதனை நினைவில் வைததுக்கொள்ள வேண்டும்: கலப்பினச் செடிகள் பாலணுக்களை உண்டாக்கும்பொழுது எந்தப் பாலணுக்கள் செங்கிறத்திற்குக் காரணமான ஜீனை'ப் பெறுகின்றன, எவை வெண்ணிறத்திற்குக் காரணமான ஜீனைப் பெறுகின்றன என்பதைத் தற்செயலே’ அறுதியிடுகின்றது. தற்செயல் செயற் படுவதனால் பாலணுக்களில் பாதி சராசரியில் செங்கிறக் கூறினை யும் பாதி வெண்ணிறக் கூறினையும் பெறுகின்றன.

விந்தணுவும் (மகரந்தம்) முட்டையணுவும் (அண்டம்) முதிர்ச்சி யடைந்து கருவுறுதலுககுத் தகுதியடைகின்ற காலத்தில் அவைகள் ஒவ்வொன்றிலும் முதிர்ச்சியடையாத உயிரணுக்களில் பாதிதான் இருக்கும் என்றும், அப் பாதி ஒவ்வோர் இணையிலிருந்தும் ஒவ் வொன்றாக வந்து அமைந்தது என்றும் காம் அறிவோம். ஆதலின் அந்தி மந்தாரையின் உயிரணுவில் வெளளை அல்லது சிவப்பு

6. LTsuggp1&56ir - Sex cells or gametes 7. தற்செயலே - Chance.