பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. வாழையடி வாழை

யான தன்மையோடிருப்பதில்லை. அந்திமந்தாரையில் சிவப்பு, வெண்மை நிறத்திற்குக் காரணமான ஜீன்கள் ஒரே அளவான ஆற்றலைப் பெற்றுள்ளன, ஆதலின் வெவ்வேறு நிறமுள்ள இரண்டு ஜீன்கள்’ வந்து சேரும்பொழுது இரண்டு நிறங்களின் கூறுகளும் புதிய பூவில் சமமாக வெளிப்படுகின்றன. ஆனால், பட்டாணியிலும் எலியிலும் அங்ஙனம் ஏற்படுவதில்லை. பட்டாணி யில் செக்கிறம் ஓங்கி நிற்கின்றது . அது வெண்ணிறத்தை மறைத்து விடும் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது. அங்ஙனமே, எலியிலும் கருமைகிறம் ஓங்கிகின்று வெண்ணிறத்தை மறைத்துவிடுகின்றது. இரண்டிலும் வெண்ணிறம் பின்தங்கி நிற்கின்றது.” கலப்பினச் சேர்க்கையால் உண்டான பட்டாணியின் நிறக்கோல்களில் வெண்மை, சிவப்பு ஆகிய கிறங்களுக்குரிய ஜீன்கள’ இருப்பினும் செந்நிறம் ஓங்கி நிற்பதால் கலப்பினப்பூ சிவப்பாகவே இருக்கின்றது. அங்ஙனமே கலப்பினச் சேர்க்கையால் உண்டான எலியின் நிறக் கோல்களில் கருமை, வெண்மை ஆகிய இரண்டு நிறங்களுக்கும் உரிய ஜீன்கள்’ இருப்பினும் கருமைநிறம் ஓங்கிநிற்பதால் எலி கறுப்பாகவே இருக்கின்றது.

இந்த இரண்டிலும் ஓங்கி நிற்கும் பண்பினை R என்ற குறி பீட்டாலும் பின்தங்கி நிற்கும் பண்பினை என்ற குறியீட்டாலும் குறிப்பிடுவோம். இதனால் இரண்டு கலப்பினங்களிலும் முதிராத உயிரணுக்களில் உள்ள ஜீன்'களின் இணை RR, r என்ற குறியீடுகளைப் பெறுகின்றன. அவை இரண்டும் முதிர்ச்சி யடைந்து கருவுறுவதற்குத் தகுதியடைகின்ற காலத்தில் படத்தில் (படம்-30) காட்டியவாறு பிரிகின்றன. இதை முன்னரும் விளக்கி யுள்ளோம். இரண்டிலும் வெண்மை நிறம் முற்றிலும் மறைந்தே போய்விடுவதில்லை. முதல் தலைமுறையில் கலபபினத்தில் இது மறைந்து காணப்படுகின்றது . அவ்வளவு தான். இரண்டு எடுத்துக் காட்டுகளிலும் முதல் தலைமுறையில் உண்டானவற்றை அவற் றிற்குள்ளேயே ஓரினச் சேர்க்கை செய்தால், அதனால் கிடைக்கும் பட்டாணி வகைகளிலும் எலி வகைகளிலும் சுமார் நான்கில் ஒரு

2. SPJst figpsb - Dominant. 8. பின்தங்கி நிற்றல் - Recessive.