பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம்

அறிவிலே தெளிவு. நெஞ்சிலே உறுதி.

அகத்திலே அன்பினோர் வெள்ளம், பொறிக ளின் மீது தனியர ச. ணை

பொழுதெலாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம் கரும யோகத்தில்

நிலைத்திடல் என் றிவை அருளாய், குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத் தாய்க்

குலவிடும் தனிப்புரம் பொருளே.’

-பாரதியார்

கதைகளில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்துக் காலத்தைக் கொன்னே கழிக்கும் தமிழ் கூறு நல்லுலகப் பெருமக்களிடம் , குறிப்பாக இளைஞர்களிடம், அறிவியல் கருத்துகள் பரவ வேண்டும் என்பது நான் கல்லூரியில் அறிவியல் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே (1934-39) கண்ட கனவு. நான் ஆசிரியப் பணியில் இறங்கியபிறகு (1941 முதல்) இக் கனவை நனவாக்கத் துணிந்தேன். புதிதாகத் தொடங்கப் பெற்ற உயர்நிலைப் பள்ளியில் வேலைகள் அதிகமாக இருங் தமையால் அறிவியலில் கவனம் செலுத்த நேரம் கிடைக்க வில்லை. ஆனால் தமிழன்னையின் மடியில் கிடந்துகொண்டு’ தமிழமிழ்தத்தை ஆரா அவாவுடன் பருகிக் களித்தேன்.

1950 சூலை முதல் நான் முயலாமையாலேயே காரைக்குடி திரு. சா. கணேசன் (பின்னால் இவர் கம்பன் அடிப்பொடி யானார்) அருளால் வள்ளல் அழகப்பர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பணி புதிதாதலால் மொழிபயிற்றும் முறைகள்

1. பா. க : சுய சரிதை - 49.