பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 00 வாழையடி வாழை

ஒவ்வொரு ஜீனும் பல அணுக்களாலான அணுத்திரளையாகும். ஆனால் ஜீன் மிகவும் பிரத்தியேகமான வகையைச் சார்ந்த அணுத் திரளையாகும். அஃது உயிருள்ள பொருள் அஃது உயிருள்ள பொருள்களிலேயே மிக நுண்ணியது; வரம்பின்றித் தானாகவே பல்கிப் பெருகும் அற்புத ஆற்றல் வாய்ந்தது. ஏனைய அணுத் திரளைகட்கு இவ்வித பண்பும் இல்லை; ஆற்றலும் அமையவில்லை என்பது உணரத்தக்கது.

சில ஆண்டுகட்கு முனனர் விட்டமின்கள், ஹார்மோன்கள், நுரைப்புளியங்கள்* அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தது போலவே

இன்று ஜீன்கள்’ அவர்கள் கவனத்தைக் கவர்ந்துள்ளன. அவற்றைப்பற்றி ஆராய்ந்து அவர்கள் சில தகவல்களை வெளி யிட்டுள்ளனர். இன்று நாம் ‘ஜீன்கள்’ என்ற ஒருவகைப்

பொருள்கள் உள்ளன என்றும், அவை எங்கு வதிகின்றன என்றும், அவை எத்தகைய விளைவுகளை உண்டாக்குகினறன என்றும் அறி கின்றாேம். ஆனால் விட்டமின்களையும் ஹார்மோன்களையும் உற்பததி செய்வதைப்போலவே ஜீன்"களைத் தனியாகப் பிரித்துப் பகுத்து ஆராயும் முறைகளையோ அல்லது அவற்றைச் செயற்கை முறைகளில் உற்பத்தி செய்வதையோ இன்னும் அறிவியலறிஞர்கள் கண்டறியவில்லை.

ஆளுல் ‘ஜீன்கள்’ மிகச் சிக்கலான புரத அணுத்திரளைகளா லானவை என்று நம்புகின்றனர். அவை ஒருவகை நச்சுக் கிருமிகளைப்” போன்ற பண்புகளையுடையவை என்றும் கூறு கின்றனர். மேலும் பல்வேறு உயிர்வாழ் பிராணிகளிடையே யும் ஒரு தனியபட்ட .ெ பா ரு ளி லு ம் உள்ள ஒரு ஜீன் பல கோடிக்கணக்கான அணுக்களால் ஆனது என்றும், அதன் தனிப்பண்பு” அதிலுள்ள நியூகளிக் அமில அளவினைப் பொறுதத தென்றும், ஒரு ‘ஜீனி’ லுள்ள அணுக்களின் இயல்பு, எண்

4. நுரைப்புளியங்கள் - Enzymes. 5. Lysglh - Protein. 6. நச்சுக் கிருமி - virus. 7. K5soft'luorul - Specificity.