பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதச் சிற்பிகள் 101

ணிக்கை, அமைப்பு முறை இவற்றைப் பொறுத்தே எண்ணற்ற வகைப் பண்புகள் அமைகின்றன என்றும் அவர்கள் உரைக் கினறனர்.

செயற்படுதல் : இனி, ஜீன்கள்’ எங்ஙனம் செயற்படு கின்றன என்பதைக் காண்போம். ஒவ்வொரு ஜீனும்’ தனித் தனியே ஒரு நுரைப் புளியம் அல்லது கடுவினையாக்கிபோல்” செயற்படுகின்றது என்று சொல்லலாம். இப பொருள்கள்தாம் யாதொரு மாற்றமும் அடையாமலேயே தம்மைச் சூழ்ந்துள்ள பொருள்களிடம் சில மாற்றங்களை விளைவிக்கின்றன என்பதை நாம் அறிவோம். பாலை உறையவைப்பதற்குச் சிறிது மோர் சேர்க் கின்றாேம்: ரொட்டிமா உப்புவதற்குப் புளிச்சக் காடியைச் சேர்க்கின் றோம். இவை யாவும் துரைப்புளியங்களாகும். இங்ஙனமே பல தொழிற்சாலைகளில் விரும்பும் வேதியியல் மாற்றங்களை” விளை விப்பதற்கு நூற்றுக்கணக்கான கடுவினையாக்கிகள் (எ - டு. சிறு பிளாட்டினத் துண்டுகள்) சேர்க்கப்பெறுகின்றன.

புதிதாக ஒரு மனிதனைப் படைப்பதில் ‘ஜீன்கள்’ அற்புதச் சிற்பிகள்போல் பணியாற்றுகின்றன. முதலில் அவை முட்டையி லுள்ள பொருளைக் கொண்டும், அதன் பிறகு தாய் அனுப்பும் பொருள்களைக் கொண்டும் செயல் புரிகின்றன; இபபொருள் களினின்றும் அவை பல்வேறு புதிய பொருள்களை உண்டாக்கு கின்றன. இந்தப் புதிய பொருள்கள் ஜீன்களுடன் எதிர்வினை புரிவதால்” மேலும் புதிய பொருள்கள் உண்டாகின்றன. இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் உடலிலுள்ள உயிரணுக்கள் யாவும் உண்டாவதற்கும் அவை பல்வேறு வகை உயிரணுக்களாகப் பிரிந்து செல்வதற்கும் வாய்ப்புகள் உண்டாகின்றன.

‘ஜீன்கள்’ உயிருள்ளவை; ஆகவே, அவற்றை வெறும் வேதியியற் பொருள்கள் என்று கருதுதல் ஆகாது. அவை புரியும்

8. கடுவினையாக்கி - Catalyst 9. Gsustustuusi unir spth – Chemical change. 10. எதிர்வினைபுரி - React.