பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதச் சிற்பிகள் 1 03

முட்டையிலுள்ள உணவை உண்டவுடன் அவர்கள் முன்னர் குறிப்பிடடபடி ஒவ்வொருவரும் இரண்டாகப் பிளவுபட்டு இரண்டு நபர்களாகின்றனர். ஒற்றை உயிரணுவாக இருந்த முட்டை யணுவும் இரண்டு உயிரணுக்களாகவும், இரண்டு நான்காகவும், நான்கு எ ட் டா க வும்-இவ்வாறு பல்கிப் பெருகுகின்றது. இப்பொழுது தாயினிடமிருந்தும் தந்தையினிடமிருந்தும் வந்த தொழிலாளர் வரிசைகளைப் போன்ற வரிசைகள் இரண்டு இரண்டாக இணைந்து ஒவ்வோர் உயிரணுவையும் அடைகின்றன. இந்த உயிரணுக்கள் உடலிலுள்ள பல உறுப்புகளாக அமையும்பொழுது மேற்குறிப்பிட்ட தொழிலாளர் வரிசைகள் நம் உடலமைப்பில் காணப் பெறும் பல்வேறு வேலைப்பாடுகளுக்குக் காரணமாக இருந்து செயற்படுகினறன. இங்ஙனம் இத் தொழிலாளர்களால் அமைக்கப் பெறும் மனிதர்கள் யாவரும் அமைப்பில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி யாக இருப்பதிலிருந்து இவர்களின் நுட்பமான வேலைப்பாடும் செயல்திறனும் நம்மை வியப்புக் கடலில் ஆழச்செய்கின்றன.

இன்னொரு முக்கிய செய்தியும் ஈண்டு அறியத் தக்கது. பிரத்தியேகமாகப் பிரியும் உயிரணுக்களில் அதிக வேற்றுமை இருந் தாலும், அவற்றில் ஒவ்வொன்றிலுமுள்ள ‘ஜீன்’ தொழிலாளர் வரிசைகளில யாதொரு வேற்றுமையும் இல்லை. ஒவ்வோர் உயிரணுக்களிலும் தாயினிடமிருந்து வந்த 23 தொழிலாளர் வரிசை களும் தந்தையினிடமிருந்து வந்த 23 தொழிலாளர் வரிசைகளும் பொருத்தமாக முறைப்படி இணைந்து பணியாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக நம்முடைய கண்ணின் உயிரணுக்களில் நிறத் திற்குக் காரணமாகவுள ள ஜீன்’ காலின பெருவிரலிலும் காணப் படுகின்றது. அங்ஙனமே காற்பெருவிரலினை உருவாக்கிய ஜீன்’ கண்ணின் உயிரணுக்களிலும் காணப்படுகினறது. ஆகவே, ஒவ்வொரு ஜீனும் தன்னுடைய பிரத்தியேகமான வேலையையும் கவனித்துக்கொண்டு பல இடங்களிலும் தேவையாகவுள்ள பொதுச் செயல்களிலும் பங்கு பெறுகின்றது என்று நினைக்கத் தோன்று கின்றது.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலும் இரண்டு கிறக் கோல்களைக்கொண்டு நம் வாழ்க்கையைத் தொடங்குகின்றோம் என்பதை ஈண்டு நினைவுகூர்தல் வேண்டும். நம்முடைய கிறக்