பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? 06 வாழையடி வாழை

கிறக்கோல்களின் அமைப்பும் சிலசமயம் மாறிவிடும் என்பதைக் குறிப்பிட்டோம் அல்லவா? அவை தழுவிப் பிரியும்பொழுது இது நேரிடுகின்றது. இதனால் சில தொழிலாளர்கள் புதிய கூட்டங் களில் சேர்ந்துவிடுகின்றனர். இந்நிலை அவர்கள் செயல்புரிவதைப் பெரிதும் பாதிக்கின்றது. சிலசமயம் ஒரு நிறக்கோல் சில ஜீன்களை இழப்பதும், மற்றொரு கிறக்கோல் அதிகமான ஜீன்களை அடைவதும் மிகவும் அரிதாகவே நடைபெறுகின்றன.

இங்ஙனம் கிறக்கோல்கள், ஜீன்'கள் இவற்றின் அமைப்பிலும், அவை செயற்படும் முறையிலும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றை உயிரியலறிஞர்கள்தாம் நன்கு அறிதல் இயலும். நாம் அவற்றைப்பற்றி அதிகமாகக் கவலைகொள்ள வேண்டியதில்லை. ‘ஜீன்'களிடையே எண்ணற்ற தன்மை வேறுபாடுகள் இருப்பதாலும், அவை எண்ணற்ற முறைகளில் இணைவதாலும், அவை சூழ்நிலை யுடன் இடைவிடாது இடைவினை புரிவதாலும், வரையறையில்லாத வகைகளில் மனிதர்கள் தோன்றிவருகின்றனர் எனபதை ஈண்டு. நாம் நினைவில் வைத்துக்கொண்டால் போதுமானது. நம்முடைய முகத்தோற்றங்கள், உறுப்புகள், அறிவுநிலைகள், உணர்வுநிலைகள் முதலியவற்றில் பல மாறுபாடுகள் இருப்பதற்கு இந்த ‘ஜீன்'களே பொறுப்பாக உள்ளன என்பதை அடுத்துக் காண்போம்.