பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 08 வாழையடி வாழை

முழுமையாக அமையுங்கால். அஃது ஒவ்வொரு சிறப்புக் கூறு உருவாக்கப்பெறுதலைப் பாதிக்கின்றது; அங்ஙனமே ஒவ்வொரு சிறப்புக் கூறும் தனித் தனியாகத் தனக்கு அண்மையிலுள்ள சிறப்புக் கூறுகளைப் பாதிக்கின்றது.

இதை மேலும் விளக்குவோம். பிள்ளையார் சதுர்த்தியின் பொழுது களி மண்ணினால் பிள்ளையார் உருவத்தைச் சமைப்பதில் உங்கட்கு அநுபவம் உண்டல்லவா ? பிள்ளையார் உருவம் உங்கள் எண்ணப்படி சரியாக அமையாவிடில்-வேடிக்கையாக அல்லது கோபமாக-அதனை அப்படியே சிறிது நசுக்கிப் பார்க்கின்றீர்கள் அல்லவா? பிள்ளையாரின் தலைப்புறத்திலிருந்து கீழ்நோக்கி அமுக்கும் பொழுதும், புடைப் பக்கங்களை அமுக்கும் பொழுதும் ஒவ்வொரு சிறப்புக் கூறிலும் ஏற்படும் மாற்றங்கள் உங்கட்கு ஈகைப்பினை விளைவிக்கின்றதன்றோ? அங்ஙனமே பூதங் காட்டும்’ ஆடியில் உங்கள் முகத்தைக் காணும்பொழுதும், வெந்நீர் அண்டா நீரில் உங்கள் முகம் பிரதிபலிப்பதைக் காணும்பொழுதும் அண்டா வாயின் குறுகலுக்கும் அகற்சிக்கும் ஏற்றவாறு உங்கள் முகம் குறுகலாகவும் விரிந்தும் காணப்பெறுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மூக்கும், கண்ணும், உதடுகளும் தோற்றத்தில் மாறுபட்டுக் காணப்பெறுவது உங்கட்கு நகைப்பினைத் தருகின்றதன்றோ ?

இக் கூறிய எடுத்துக்காட்டு முகத்தோற்ற அமைப்பினை ஒரு வாறு விளக்கும். மண்டையோட்டின் அமைப்பு முழுவதிலும் சில ஜீன்கள் பங்கு பெறுகின்றன. சிலவகை காய்களின் முகங்களை நோக்கினால் இவ்வுண்மை தெளிவாகும். ஆயின், நம் நற்பேற்றின் காரணமாக இத்தகைய பெரிய வேறுபாடுகள் மானிட இனத்தில் அமையவில்லை. எனினும் ஒரு சில குள்ளர்களின் முக அமைப் பினையும் ஒவ்வொரு சிறப்புக் கூறினையும் உற்றுநோக்கினால் ஒன்று அல்லது இரண்டு ஜீன்'கள் முற்றிலும் வேறாக மாற்றிவிடு கின்றன என்பதை அறியலாம். ஆனால், சாதாரண மக்களிடம் ஒன்று அல்லது இரண்டு ஜீன்கள் இத்தகைய மாற்றங்களை விளைவிப்பதில்லை. எனினும், ஒருசில ஜீன்கள் ஒன்று சேர்ந்து ஒருவர் முகம் நீளமாகவோ அல்லது அகலமாகவோ அமைவதற்குக் காரணமாகலாம். சில சுரப்பிகளில் ஊறும் சாறுகளும் இத்தகைய