பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 வாழையடி வாழை

அமைப்பில் தனி ஜீன்களும் பங்கு பெறுகின்றன என்று ஆய்வாளர் கள் ஒரு முகமாகக் கருதுகின்றனர்.

பெரும்பாலும் மூக்கின் அமைப்பு முழுவதும் அப்படியே ஒரு பெற்றோரிடமிருந்து மரபு வழியாக இறங்குகின்றது என்பது உண்மையே. இததகைய ஒத்தமைப்புகள் உள்ளவர்களிடம் மூக்கின் அமைப்பிற்குக் காரணமாகவுள்ள ஜீன்கள் யாவும் ஒரு கொத்தாக இறங்குகின்றன என்றும், அவற்றுள் பெரும்பான்மையானவை ஒரு பெற்றோருடையவற்றிலிருந்து மற்றொரு பெற்றோருடையவை ஓங்கி நிற்கின்றன என்றும் கருதுவதே பொருத்தமுடையதாகும். ஆயினும், ஒரு குழந்தையின் மூக்கு இரு பெற்றோரின் மூக்குகளின் அமைபபுகளுக்கு இடைப்பட்டதாகவே அமைகினறது. இதனால் மூக்கின் அமைப்பில் பல்வேறு கூறுகள் பங்கு பெறுகின்றன என்ற கொள்கை வலியுறுகின்றது. ஆயினும், தனித்தன்மை வாய்ந்த ஜீன்கள் பங்கு பெறுகின்றன எனபதும் அவை ஒன்றையொன்று தொடர்பு கொண்டே பிரிகின்றன என்பதும் வெள்ளிடை மலை. இவை இங்ஙனம் செயற்படாவிடில், ஒவ்வொரு குழந்தையின் மூக்கும் தன் பெற்றோர்கள் மூக்குகளின் கலவையாக அமைந்து விடும். ஆனால், நடைமுறையில் அங்ஙனம் அமைவதில்லை என்பதை நாம் அறிவோம். மிக நெருங்கின உறவினர்களிடையே கொண்டு-கொடுத்து வரும் குடும்பங்களிலும் பல்வேறு வகை வடிவம், பருமனுள்ள மூக்குகள் காணபபெறுகின்றன. இது மெண்டலின் விதிகளை மெய்ப்பிக்கின்றது.

வெவ்வேறு வித மூக்குகளையுடைய பெற்றோர்கட்குப் பிறக் கும் குழவிகளின் மூக்குகள் எங்ஙனம் அமைன்ைறன என்பதை இந்த ஒவியங்கள் விளக்குகின்றன. பொதுவாக மிகவும் சுறுசுறுப்பாக வுள்ள ஜீன்கள் -பெரிய, எடுப்பான மூக்குகடகுக் காரணமாகவுள்ள ஜின்கள் - அடக்கமாகவுள்ள ஜீன்களை அடங்கச் செய்து தாம் ஓங்கி நிற்கவே முனைகின்றன. எனவே, எடுப்பான தோற்றமுள்ள குவிந்த மூக்கிற்குக் காரணமான ஜீன்கள (முதல் இணை) அடங்கிய நிலையில் நேராகவுள்ள மூக்கிற்குக் காரணமான ஜீனகளை அடக கித் தாம் ஓங்கி நிற்கின்றன. உயர்ந்த குறுகலான எலும்புகளின் அமைப்பிற்குக் காரணமான ஜீன்கள் (இரண்டாம் இணை) தாழ்ந்த