பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 17

உடற் பருமனும் வடிவமும்

நம்முடைய உடற் பருமனும் வடிவமும்கூட ஜீன்களால்தாம் அறுதியிடப்பெறுகின்றன என்பதை காம் அறிவோம். ஆயினும் ஒருவர் பருத்த உடலுடனும், மற்றொருவர் குசசி போன்றும், ஒருவர் கெட்டையாகவும். இன்னொருவர் குட்டையாகவும் இருப்ப தற்குக் காரணம் என்ன? இப் பண்புக் கூறுகள் எந்த அளவு மரபு வழியாக இறங்குகின்றன? எந்த அளவு சூழ்நிலையால் அறுதியிடப் பெறுகின்றன? இவற்றை இங்கு ஒரு சிறிது காண்போம்.

உடற் பருவனும் வடிவமும் மரபுவழியாக இறங்குகின்றன என்றுதான் நாம் கருதுவோம். ஆயினும், அவை உண்மையில் பெரும்பாலும் சூழ்நிலையால்தான் அறுதியிடப்பெறுகின்றன. அன்றியும். மரபுவழிக் கூறுகளும் நேர்முறையிலும் நேரல் முறை யிலும் செயற்பட்டுப் பெரிய வேற்றுமைகட்குக் காரணமாகின்றன. பெரும்பாலும் உடற்கட்டமைவதில் உட்சூழ்நிலைக் கூறுகள் பங்கு பெறுகின்றன என்றும், இவை சுரப்பிகளைப் பொறுத்தவை என்றும் கண்டறிந்துள்ளனர். ஆண்களையும் பெண்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்து இவை யாவும் பால்-நிறக்கோல்களின் சமநிலைகளால் உண்டாக்கப்பெறும் வளர்முறை வேறுபாடுகளால் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பெற்றுள்ளன.

உயரம் : இதுகாறும் மேற்கொண்ட சோதனைகளால் ‘கெட்டை என்ற பண்புக்கும் குட்டை என்ற பண்புக்கும் தனித்தனியான ஜீன்கள் காரணமாகின்றன என்றும், இவை மிகச் சாதாரண முறை களிலேயே செயற்படுகின்றன என்றும் கண்டறியப்பெற்றுள்ளன. இந்த இரண்டு வகை ஜீன்களும் கலக்க நேரிடுங்கால் எவ்வாறு