பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடற் பருமனும் வடிவமும் 117

செயற்படுகின்றன என்று இன்னும் தெளிவாக அறியக்கூடவில்லை. ஆயினும், நெட்டைத் தன்மைக்குக் காரணமான ஜீன்கள் பின்தங்கி நிற்பவை என்றும், குட்டைத தன்மைக்குக் காரணமான ஜீன்கள் ஓங்கி நிற்பவை என்றும் ஒரு கொள்கை நிலவி வருகின்றது. இதிலிருந்து கெட்டையானவர்களிடம் குட்டைக்குக் காரணமாக வுள்ள ஜீன்கள் இல்லாதிருக்கக் கூடுமென்றும், குட்டையானவர் களிடம் நெட்டைக்குக் காரணமான ஜீன்கள் மறைந்து கிடக்கக்கூடும் என்றும் திட்டமாகக் கருதலாம். தனிப்பட்ட ஒருவரிடம் இந்த இரண்டு வகை ஜீன்களில் எவை இருப்பினும் அவை சூழ்நிலையால் விரைவாகவோ அன்றி மெதுவாகவோ செயற்படச் செய்யக்கூடும். உணவுமுறை, வாழக்கைமுறை, மருத்துவ உதவி இவற்றால் இவை கணிசமான அளவு மாற்றம் அடைகின்றன. ஆயினும், ஒரு சில அறிவியலறிஞர்கள் இக் கொள்கையை ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் உலகக் கால நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும், அண்டக்கதிர்களும்’, வேறுசில கண்டறியப்பெறாத கூறுகளும் இதில் பங்கு பெறலாம் என்று கருதுகின்றனர்.

இவற்றையெல்லாம் ஒருங்கு வைத்து நோக்கினால், மரபுவழி யாக இறங்கும் நெட்டைத்தன்மை மிகவும் சிக்கலானது என்பது தெரியவரும். எனினும், இவற்றால் சில பொது உண்மைகள் தெளி வாகின்றன. சாதாரணமாக கெட்டையான பெற்றோர்கட்குப் பிறக்கும் குழவிகள் கெட்டையாகவே அமையும். இவர்களிடம் உள்ள நெட்டைத்தன்மைக்குரிய ஜீன்களே இதற்குக் காரணமாகும். குட்டையான பெற்றோர்களில் பல வகையினர் இருக்கலாம்: (1) தலைமுறை தலைமுறையாகக் குட்டையாகவே இருந்துவரும் பெற்றோர்களிடம் பெரும்பாலும் குட்டைத்தன்மைக்குரிய ஜீன்கள் அதிகமாக இருத்தல் கூடுமாதலால், அவர்கட்குப் பிறக்கும் குழவி கள் யாவும் குட்டையாகவே இருத்தல்கூடும்; (2) தலைமுறை தலைமுறையாக கெட்டையும் குடடையும் கலந்த பெற்றோர்கட்குப் பிறக்கும் குழவிகள் குட்டையிலிருந்து நெட்டைவரை பல்வேறு உயரங்களில் இருத்தல் கூடும்; (3) பல்வேறு சூழ்நிலைக் கூறுக ளால் வளர்ச்சி தடைபட்டிருக்கும் பெற்றோர்கட்குப் பிறக்கும்

1. oorl_3&AEstssir - Cosmic rays.