பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 18 வாழையடி வாழை,

குழவிகள் அவர்களைவிட உயரமாகவே இருப்பர். இன்னும், தந்தை குட்டையாகவும் தாய் நெட்டையாகவும் உள்ளவர்கட்குப் பிறக்கும் குழவிகள் சாதாரணமாகக் குட்டையாகவே இருத்தல் கூடும். மேலும், ஆண்களிடம் இருபத்தேழு வயது வரையும், பெண்களிடம் இருபத்தைந்து வயது வரையிலும் உயரம் அதிகரித்து வரும் என்றும் கண்டறியப்பெற்றுள்ளது.

தம் விருப்பப்படி மனிதர்களைப் பிறப்பிக்க வேண்டுமென்ற முயற்சியும் நடைபெற்றதுண்டு. பிரஸ்ஸிய நாட்டு மன்னன் முதலாம் ஃபிரைடரிச் வில்ஹெல்ம்’ என்பான் நெட்டையான போர் வீரர்களை உண்டாக்க வேண்டும் என்று நினைத்தான். தன் சேனையில் நெட்டையாகவுள்ள போர் வீரர்களை நெட்டையாகவுள்ள பெண் களை மணக்கச் செய்தான். ஆயினும், இந்தச் சோதனை முற்றுப் பெறுவதற்குள் அவன் இறந்துவிட்டான். காதரின் டி மெடிஸி’ என்ற மாது பல விநோதமான கருத்துகளையுடையவள். அவள் சித்திரக் குள்ளர் இனத்தைப் படைக்கக் கருதினாள். அதற்காக அவள் குள்ளர்களைக் கொண்டே பல திருமணங்களைச் செய் வித்தாள். ஆனால் இத்தகைய தம்பதிகள் மலடுகளாகப போய் விட்டனர். பெரும்பாலும் இததகைய இணைகள் இத்தகைய பலனைத்தான் அளிக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால், அம் மாது குறுகி உறுதியாகவுள்ள கை கால்களையும் பெரிய தலையையும் உடைய ஒருவகைக் குள்ளர்களிடையே இச் சோதனையைச் செய்திருப்பாளேயானால், அவள் விருப்பம் ஒருவாறு நிறைவேறியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வடிவம் : மனித வடிவம் அமைவதில் பல்வேறு வகை ஜீன்கள் பங்கு பெற்று மரபுவழிக் கூறுகளை அமைக்கின்றன. “குப்பையிலும் மாணிக்கம் கிடைக்கும்’ என்ற முதுமொழிக் கேற்ப “எட்டேகால் லட்சணமுள்ள பெற்றோர்களிடத்திலும் அழகிய பெண்கள் பிறப்பதிலிருந்து நாம் இதனை உறுதியாக அறுதியிட முடியாது என்பதை ஓரளவு அறியலாம். எனினும், சாதாரணமாக

2, Friedrich Wilhelm 1.

3 Catherine de Medici.