பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடற் பருமனும் வடிவமும் 1 19

ஒரு சிலரிடம் குச்சிபோல் ஒல்லியாக இருக்குங்தன்மை பின்தங்கி கிற்கும் ஜீன்களாலும், பருத்துக் கனத்து இருக்கும் தன்மை ஓங்கி கிற்கும் ஜீன்களாலும் அறுதியிடப்பெறுகின்றன என்பதை காம் காணலாம். குச்சிபோல் ஒல்லியாக இருப்போருக்கு ஒல்லியான குழவிகளும், பருத்த நிலையிலுள்ள பெற்றோர்கட்குப் பருத்த நிலை யிலுள்ள குழவிகளும் பிறப்பதைக் காணலாம். சில சமயம் பருத் திருப்பவர்கட்கும் மறைந்து கிற்கும் ஒல்லியான ஜீன்களின் காரண மாக ஒல்லியான குழவிகளும் பிறப்பதுண்டு.

பருத்த உடல் அமைவதற்கும் ஜீன்களே பொறுப்பாகவுள்ளன என்பது ஆய்வாளர்களின் கருத்து. சாதாரணமாக ஒருவர் உண்ணும் உணவின் அளவிற்கும் அதனை உடல் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கும் ஒரு சமனிலை உண்டு. ஆனால், பிறப்பி லேயே பருத்த உடலமைப்புள்ளவர்களின் இச் சமனிலையை உண்டு பண்ணும் கூறுகள் தம் செயலிழந்துபோய், அவர்கள் உண்ணும் உணவின் பெரும்பகுதி கொழுப்பாக மாறி இழையங்களில் படிந்து விடுகின்றது. பிறப்பிலேயே அமைந்த சுரப்பிக் கோளாறுகள், தவறான உணவு முறைகள், உள்ளக் கிளர்ச்சிக் கூறுகள் ஆகிய வையே பருத்த உடலமைப்பிற்குக் காரணங்களாக அமைகின்றன. சிலர் அதிகமாக உண்டாலும் உண்ணாவிட்டாலும் பருக்கின்றனர் : சிலர் எவ்வளவு உண்டாலும் குச்சி போலவே ஒல்லியாகவே இருக் கின்றனர். ஆகவே, பிறவியிலேயே அமைந்த ஜீன்களே இதற்குப் பொறுப்பு என்று தெரிகின்றதல்லவா ?

பிளாரிடாவைச் சேர்ந்த ரூத் போண்டிகோ’ என்பாள் உலகி லேயே மிகப் பருத்தவளாக இருந்தாள். ஐந்தடி ஐந்தரை அங்குல உயரமுள்ள அவளது எடை 772 இராத்தல்; அவள் தாயைப் போலவே (தாயின் எடை 720 இராத்தல்) பருத்திருந்தாள். அவள் பிறக்கும்பொழுது 16 இராத்தல் எடையும், ஒரு வயது முடி வில் 50 இராத்தல் எடையும் உடையவளாக இருந்தாள். இவள் 1942இல் தனது 38வது வயதில் இறந்துவிட்டாள். ஆனால், உலகிலேயே மிக அதிக எடையைக்கொண்ட மனிதன் தென்னெஸி

4. Ruth Pontico.