பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii

(1960-63)'வாழையடி வாழை’ என்ற இந்நூல் உருவாயிற்று. இதற்குரிய படங்களை வரையப் பல்கலைக்கழகத்தில் எழுத்த ராகப் பணியாற்றிய திரு. பாஷா என்ற இஸ்லாமிய இளைஞர் துணை புரிந்தார். அப்பொழுதே இதனை அறிஞர் அண்ணா வுக்கு அன்புப் படையலாக்கத் திட்டமிட்டிருந்தேன்.

தமிழக அரசு அறிவியல் நூல்கள் வெளியிடுவதற்கும் நிதியுதவி வழங்கும் என்ற செய்தி திருப்பதியிலிருந்தபோது கான் அறியவில்லை. பேருந்து நிலையங்களிலும் இரயிலடி களிலும் சிறு குழந்தையுடன் ‘பாலுக்காகக் கையேந்தி நிற்கும் ஓர் ஏழைப் பெண்போல நான்கு வெளியீட்டார்களை நாடி னேன். ஒவ்வொருவரும் 3, 4, 5 ஆண்டுகளாகப் படியைத் தம்மிடம் வைத்துக்கொண்டிருந்து இதைப் பதிப்பித்தால் புத்தக சந்தையில் எடுபடாது’ என்று காரணத்தைச் சொல்லித் திருப்பித் தந்துவிட்டனர். ஒய்வு பெற்றுச் சென்னையில் குடியேறிய பிறகு தமிழக அரசின் கிதி உதவி தமிழில் அறி வியல் நூல்களை வெளியிடுவதற்கும் கிடைக்கும் என்ற செய்தியை அறிந்து தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு விண்ணப் பித்தேன். அரசும் என் கிலைக்குக் கழிவிரக்கம் கொண்டு

8. இந்த நூல்முகம் அச்சாவதற்கு முன்னர் இன்னொரு செய்தி கிடைத்தது. பிரேசில் (தென் அமெரிக்கா) நாட்டைச் சார்ந்த 42 அகவைப் பெண்மணிக்குப் பத்தாவது முறையாக 8-7-84 அன்று இரட்டைக் குழவிகள் பிறந்தன. இந்தப் பெண்மணியும் இரட்டையாகப் பிறந்தவள் ; இவள் தன் 18 ஆவது வயதிலேயே இரட்டைக் குழவிகளைப் பெற்றவள். இவளுடைய இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் இரட்டைகள் பிறந்துள்ளன. இவள் அன்னையும் பத்து முறை இரட்டைக் குழவிகளை ஈன்றவள். எனவே, இவளது குடும்பத்தில் ‘இரட்டைப் பிறவிகள்’ குடிவழிக் கூறாக அமைந்து கிடப்பதை soul (pig frpg ( The Hindu dated 5–7–84) @#sorsh பக், 271-72 காண்க)