பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வாழையடி வாழை

இணைந்தே ஒருவரது வாழ்க்கை அமைகின்றது என்றும், ஒன்றில் லாமல் மற்றொன்றை ஆராய்வது இயலாத செயலென்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மீன் முக்கியமா? அல்லது அது நீந்தி வாழும் நீர் முக்கியமா? என்ற வினாவை ஆய்ந்தால் இவ்வுண்மை தெளிவாகும் என்று அவர்கள் இயம்புகின்றனர்.

நாம் மனிதனாகப் பிறந்து வளர்வதே மரபுவழியாக ஏற்படுவ தாகும். நாம் மரபுவழியாகப் பெற்ற உள்ளார்ந்த இயல்புகள் (Potentialitics) நன்கு வலியுறுத்தி வளர்வதற்கும், அல்லது அவை மாறுவதற்கும் அல்லது அவை வளர்வதற்கே தடையாவதற்கும் சூழ்நிலை காரணமாகின்றது. நம்முடைய ஜீன்கள் தம்முடைய பணியைத் தொடங்கிய பிறகு சூழ்நிலையால் மானிட இனத்திற்கே அடிப்படையாகவுள்ள இயற்பியல் கிலைகளை அதிகமாக மாற்ற முடியாது. எண்ணற்ற வேறுபாடுள்ள நிலைகளிலும் காட்டு மிராண்டியிலிருந்து நவீன நாகரிக மனிதன் வரையிலும், அவர் களுடைய உடற்கூற்றிலும் பொது அமைப்பிலும் யாவரும் ஒரே மாதிரியாகவே உள்ளனர்; அவர்களிடையே காணப்பெறும் வேறு பாடுகளை ஒற்றுமைக் கூறுகள் மறைத்தே விடுகின்றன.

ஆகவே, ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட எல்லைப்பரப்பில் காணப்பெறும் சிறிய வேறுபாடு களைப் பொறுத்தே ‘குடிவழியா? சூழ்நிலையா?” என்று எண்ணு கின்றோம். இந்தச் சிறு வேறுபாடுகள் சிறப்பாகச் செயற்படும் முறைகளையும் அவற்றிற்குரிய காரணங்களையும் ஆராய்வதிலேயே நம்முடைய கவனம் செல்லுகின்றது. அதாவது, ஒருவர் திறமை யாக இருப்பதற்கும் மற்றொருவர் திறமைக் குறைவாக இருப்ப தற்கும் இவ் வேறுபாடுகளே காரணமாவதால் நாம் அவற்றை ஆராயத் துணிகின்றோம். இத்தகைய திட்டமான திறமைபற்றிய ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்தும்போதுதான் மரபுவழி, சூழ்நிலை ஆகிய இரண்டு விசைகளின் செல்வாக்குகளை இனங் கண்டு அறியமுடிகின்றது.

கடந்த இரண்டாம் உலகப் பெரும்போரில் இலட்சக்கணக் கான இளைஞர்கள் கொல்லப்பெற்றனர். இன்றும் சீன எல்லைத் தகராறில் ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் இறக்கின்றனர்.