பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 34. வாழையடி வாழை

கூறுகள் அனைத்திலும் ஒரே மாதிரியாகவே இருக்கும்; இரண் டும் ஆணாக இருக்கும்; அல்லது பெண்ணாக இருக்கும். அஃதாவது இவ்வகைக் குழவிகளில் பால்வேற்றுமை இராது. கருப்பையில் வளரும்பொழுது இரண்டும் ஒரே கோரியானுல்” மூடப் பெற்றிருக்கும். கருப்பந்தின் உட்புறத்தில் உயிரணுக்கள் ஒரு வரிசையாகவும் கருப்பந்துச் சுவருடன் சேர்ந்தும் அமையும் அமைப்பே கோரியான்’ என்பது. இந்த அமைப்பு தாயின் குருதியி லிருந்து உணவுச் சத்துகளைப் பெறுவதற்குத் துணை செய்கின்றது. மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனிப் பனிக்குடமும்!” தனித்தனிக் கொப்பூழ்க் கொடியும் இருக்கும். கொப்பூழ்க் கொடிகள் ஒரே நஞ்சுடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய இரட்டைப் பிறவிகளை அச்சு இரட்டைகள் என்று வழங்குவதும் உண்டு. இவை உண்டாவதைப் படம் (படம்-38A) விளக்குகின்றது.

இருகரு இரட்டையர்’ : இவை இரண்டு முட்டைகள் கருவுறு வதனால் உண்டாவதாகும். சாதாரணமாக மாதத்திற்கு ஒரு முட்டைதான் முதிர்ந்து கருக்குழலில் செல்லும்; சில சமயங்களில் இரண்டு முட்டைகள் முதிர்ச்சியுற்றுச் சூற்பைகளிலிருந்து வெளிப் பட்டுக் கருக்குழலில் செல்வதுண்டு. ஒவ்வொரு முட்டையிலும் ஒவ்வொரு விந்தணு புகுந்து இரண்டு முட்டைகளும் கருவுறும். இவ்வாறு கருவுற்ற முட்டைகள் கருப்பையில் வெவ்வேறு இடங் களில் பதிந்துகொண்டு இரண்டு கோரியான்களில் வளரும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பனிக்குடமும், தனித்தனிக் கொப்பூழ்க் கொடியும், தனித்தனி நஞ்சும் இருக்கும். இவ்வாறு பிறக்கும் இரட்டைக் குழவிகள் உருவம், தன்மை முதலானவற்றில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் அமையலாம்; அல்லது இரண்டும் ஆணாகவோ, பெண்ணாகவோ அமையலாம். இரண்டு முட்டைகளின் நிறக்கோல்கள் பிரியும்பொழுது இரண்டினுடைய

2. கோரியான் . Chorion. 3. Lustifi&(3,1–ih – Amniotic sac.

4. gebas(b grt:-sol-uust - Fraternal twins.