பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 20

இரண்டுக்கு மேற்பட்ட பிறவிகள்

1924ஆம் யாண்டு மே மாதத்தில் ஒரு நாள் இரவு ஓர் அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது. இயற்கையன்னை அறிவியல் செல்வியின் மடியில் ஐந்து குழவிகளை அளித்தாள். இந்த ஐந்து குழவிகளும் ஒரே கருப்பத்தில் ஏற்பட்டவை. சாதாரணமாக இத்தகைய நிகழ்ச்சி ஒரு நூற்றாண்டில் ஏறக்குறைய பத்து தடவைகள் நிகழலாம். இங்குப் பிறந்த குழவிகள் யாவும் அச்சு வகையைச் சார்ந்தவை , இவை ஒரே முட்டையில் தோன்றியவை என்பதை அறிவியலறிஞர்கள் இரட்டைகளுக்குரிய சோதனை களால் மெய்ப்பித்தனர். இந்தக் குழந்தைகளைப்பற்றிய விவரங் களை அறிவதற்கு முன்னர் ஒரு பேற்றின் மூன்று குழவிகள், ஒரு பேற்றின் நான்கு குழவிகள் எங்ஙனம் ஏற்படுகின்றன என்பதை அறிந்து கொள்வோம். இரட்டைப் பிறவிகள் தத்துவமே இங்கும் செயற்படுகின்றது. இவ்வகைப் பேற்றில் பிறக்கும் குழவிகள் யாவும் ஒரே மாதிரியாக உள்ளவை. உடன்பிறப்பு நிலையிலுள்ளவை, இரண்டும் கலந்தவை என்ற மூன்று தொகுதிகளில் அடங்கும். அஃதாவது, இவை யாவும் ஒரே முட்டையிலிருந்தும் தோன்றலாம் : அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளினின்றும் 9}_.&rt_.fI 856Ttf).

முக்கோவைக் குழவிகள்: ஒரே கருப்பத்தில் மூன்று குழவிகள் ஏற்படுவது அடியிற்கண்ட முறைகளில் நிகழலாம் :

(1) ஒரே முட்டையிலிருந்து மூன்று குழவிகளும் தோன்ற லாம் : இம் மூன்றும் ஆண்களாகவும், அல்லது பெண்களாகவும்

1. &r Gupslassif – Triplets.