பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டுக்கு மேற்பட்ட பிறவிகள் 143

முட்டைகளிலிருந்து சகோதரக் குழவிகள் இரண்டும் தோன்றலாம்: சகோதரக்குழவிகள் இரண்டும் அச்சு குழவிகளின் பாலைச் சார்ந் திருக்கலாம்: அல்லது அவற்றின் எதிர்பாலையும் சார்ந்திருக்கலாம்: அல்லது இருபாலைச் சார்ந்தும் இருக்கலாம். ஆகவே, இம் முறையில் தோன்றும் குழவிகள் (அ) நான்கும் ஒரே பாலைச் சார்நதனவாகவும் (ஆ) இரண்டு ஆணகளாகவும் இரண்டு பெண் களாகவும் (இ) மூன்று ஒருபாலைச் சார்ந்தனவாகவும், நான்காவது எதிர்பாலைச சார்ந்ததாகவும் அமையலாம்.

(4) நான்கு முட்டைகளிலிருந்தும் தனித்தனியாக நான்கு குழவிகள் தோன்றலாம். இவ்வாறு தோன்றும் குழவிகள் (அ) நான்கும் ஒருபாலைச் சார்ந்தனவாகவும், (ஆ) இரண்டிரண்டு குழவிகள் ஒவ்வொருபால் வகையைச் சார்ந்தனவாகவும். (இ) மூன்று ஒருபாலைச் சார்ந்தனவாகவும், நான்காவது எதிர்பாலைச் சார்ந்த தாகவும் அமையலாம்.

ஐந்து கோவைக் குழவிகள் : இத்தகைய குழவிகள் பல்வேறு முறைகளில் தோன்றலாம். இவை யாவும் ஒரு முட்டையிலிருந்து ஐந்து முட்டைகள் வரையிலும் மேற்கூறியவாறு பலமுறைகளில் தோன்றலாம், இக் குழவிகள் எல்லாம் ஆண்களாகவும், அல்லது எல்லாம பெண்களாகவும் அமையலாம்; அல்லது பல்வேறு விதமாக இருபாலைச் சேர்ந்தனவாகவும் இருக்கலாம்.

ஐந்திற்கு மேற்பட்ட குழவிகள் : நான்குபேருக்கு ஆறு கோவைக் குழவிகள் பிறந்தனவாகவும், இவற்றுள் ஒருவரிடமாவது ஒரு குழவி கூட உயிர்பிழைத்து வாழவில்லை எனறும் மருத்துவ இலக்கியம் மூலம் அறிகின்றோம். 1872-இல் ஒகியோ நாட்டில் ஒருவருக்கு ஒரே கருப்பத்தில், எண்கோவைக் குழவிகள் பிறந்தனவாகச் செய்தித் தாளில் வெளிவந்த செய்தி பொய்யான புனைவு என்றும், அது நீதி மன்றத்திலிருந்த ஒரு வழக்கின் கிமித்தம் கட்டிவிடப்பெற்ற செய்தி என்றும் பின்னர்த் தெரியவந்தது.

7. 895i G3:5r 6psu Glp5,35sir - Quintuplets. 8. எண்கோவைக் குழவிகள் - Octuplets.