பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 வாழையடி வாழை

மக்களிடம் இரட்டையரிலிருந்து நான்கு குழவிகள் ஒரு பேற்றில் ஏற்படும் வகையில் ஆராய்ந்ததில் அவைகள் அவ்வாறு தோன்றுவதில் ஒரு கணிதத் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கி. பி. 1895-இல் டி. ஹெல்லின்” என்ற ஜெர்மனிநாட்டு அறிவியலறிஞர் இவ்வகைப் பிறப்புகளில் ஒரு புதுமையான கணிதத் தொடரைக்’ கண்டறிந்தார். எ-டு. ஒவ்வொரு தொண்ணுறு பிரசவத்திற்கும் ஓர் இரட்டைக்குழவிப் பிரசவம் வீதம் நடைபெற்றால் முக்கோவைக் குழவிப் பிரசவம் 8100 (90x90 =90) பிறவிகட்கு ஒரு தடவை வீதமும், நான்கு கோவைக் குழவிய பிரசவம் 729,000 90x90x90 = 90) பிறவிகட்கு ஒரு தடவை வீதமும், ஐந்து கோவைக் குழவிப் பிரசவம் 65,610,000 (90x90x90x90 =904) பிறவிகட்கு ஒரு தடவை வீதமும் நடைபெறுவதாகக் கூறுகின்றார். மேலும், இரட்டைப் பிறவிகள் 88, 92 ஆக அமையின் தொடர் விகிதங்களும் அவற்றிற்கேற்ப அமையும் என்றும் அவர் கருதுகின்றார். இவ் வெண்கள் யாவும் தோராயமதிப்பாகும் என்பது அறியத்தக்கது.

இந்த இயலின் தொடக்கத்தில் குறிப்பிட்ட ஐந்துகோவைக் குழவிகளைப்பற்றி அறிஞர்கள் ஆராய்ந்து பல விவரங்களை வெளியிட்டுள்ளனர். இந்த ஐந்து குழவிகளும் பெண்களாக இருப்ப தால், அவை ஒரு முட்ட்ையிலிருந்தே தோன்றியவையாகும் என்பது வெளிப்படை. எனினும், இதுவும் பல்வேறுவிதமாக நிகழலா மல்லவா? ஒரு முட்டையிலிருந்து தொடங்கினால், அது முதலில் இரண்டாகப் பிளவுபடும். அதன் பிறகு, அஃது இங்ஙனம் பிரியலாம் :

1. ஒரு பாதி இரட்டித்து. இரட்டித்த பகுதிகள் மீண்டும் இரட்டித்து நான்கு குழந்தைகளாகலாம்; இரண்டாவது பாதி ஒரு தனி குழந்தையாக வளரலாம்.

2. அல்லது இரண்டாகப்பிரிந்த பகுதிகள் இரண்டும் இரட்டித்து நான்காகலாம்; இந்த நான்கு பகுதிகளில் ஒன்று மீண்டும் இரண்டாகப் பிரியலாம்:

9. டி. ஹெல்லின் - D. Hellin. 10. & 600s;55 Qg5m Lif - Mathematical progression.