பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வாழையடி வாழை

யிலேயே அவ்வளவு நுட்பமாக அமைந்துள்ளது. இயல்பாகவே ஒரு சிலர் குறைகளுடன் பிறவியெடுத்தாலும் பெரும்பாலோர் குறை களின்றியே இருத்தல் வியப்பினும் வியப்பாகும். மேலும், இன்று இயற்கையன்னை அளித்த குறைகளால் - மரபுவழியாக இறங்கிய கேடுகளால்-பெரும்பாலானவை சூழ்நிலைகளால் ஏற்பட்டவையே. என்றும், வாழ்க்கை நிலைகளை உயர்த்தியும், மருத்துவ வசதிகளை அளிததும் இக்குறைகளை முற்றிலும் அல்லது பெரும்பகுதியை நீக்கிவிடக்கூடும் என்றும் அறிவியலறிஞர்கள் நம்புகின்றனர். சூழ் கிலைகளை மேம்பாடுறச் செய்து இத்தகைய குறைகளைக் குறைத்து இவ்வகைத் தொல்லைகளால் ஏற்படும் அச்சத்தையே போக்கியுள்ள னர் அறிவியலறிஞர்கள்.

எனினும், அறவே நீக்கமுடியாத பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. சூழ்நிலையை எவ்வளவுதான் மாற்றியமைத்தாலும் இககுறைகள் வழிவழியாக இறங்கிக்கொண்டேயுள்ளன. மேலும் சில குறைகளும் நோய்களும் ஒருசிலரை ஏனையோரை விட வன்மை யாகவே தாக்குகின்றன. அவர்களும் அவர்களின் குடிவழியினரும் உடல் வளததுடன் இல்லாமையும் எளிதாக நோய்களால் தாக்குறும் தன்மையைப் பெற்றிருப்பதுமே இதற்குக் காரணங்களாகும். வழிவழி யாக இறங்கும் குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஆயினும், இக்குறைகள் பெரும்பாலானவர்களை அதிகமாகப் பாதிப்பதே இல்லை. எனினும், சில குறைகள் உடலில் நடைபெறும் சில முக்கிய மான செயல்களில் தலையிடுகின்றன; இதனால் சிலரிடம் இயல் பிகந்த தோற்றத்தை விளைவித்துவிடுகின்றது. ஒருசிலரிடம் - அரி, தாக - இளமையிலேயே இறப்பினையும் விளைவித்துவிடுகின்றது.

இங்ஙனம் கேடு பயக்கும் செயல்களில் பங்கு கொள்ளும் ஜீன் களையே ‘தீய ஜீன்கள்’ என்று குறிப்பிடுகின்றோம். இந்த ஜீன் களில் ஒன்று அலல பல ஒரு குறை, அல்லது ஒரு நோய், அல்லது இயல்பிகந்த தன்மையை விளைவிக்கின்றதையே நாம் மரபுவழியாக இறங்குவதாகக் கூறுகின்றோம்.

மேற்கூறிய உண்மையை மிகவும் வலியுறுத்திச சொல்லவும் இயலாது. கடந்த காலத்தில் - ஏன் ? இன்னும் - சில மருத்துவர்