பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீய ஜீன்கள் 1 49

களும் பிறவியைச் சார்ந்த’ அல்லது குடும்பக் கூறாக உள்ள வற்றை குடி வழியாக வந்தவை என்று குழப்பிக் கொள்ளுகின் றனர். இந்த இரண்டு துறைச் சொற்களும் சில சமயம் ஒரு பொருட் பன்மொழியாகவும் வழங்கப்பெறுகின்றன! ஆயினும் பெரும்பாலும் அங்ஙனம் வழங்குவது தவறாகவே முடிகின்றது. ஒருநிலை பிறவியைச் சார்ந்திருபபினும் அல்லது குடும்பக் கூறாக வந்துகொண்டிருந்தாலும் அது மரபுவழியைச் சார்ந்தது என்று சொல்லி மெய்பபிக்க இயலாது; சூழ்நிலை காரணமாக இங்கிலை ஏற்படுவதாலும், இதனைச் சரியான கவனம் செலுத்தி மாற்றக்கூடு மாதலாலும் இது பொருந்தாத கூற்றாகின்றது. இதற்கு மாறாக, குடிவழியாக இறங்கிவரும் ஒரு நிலை பிறக்கும்பொழுது காணப் பெறாதிருந்து, அதற்குப பின்னர் பல ஆண்டுகள் புலனாகாமல், போயினும் போகலாம. சில சமயம் ஒரு குறிப்பிட்டவரிடம் அஃது தலைகாட்டாமலும் இருக்கலாம். பெரும்பாலும் சில அரிய பின் தங்கும் ஜீன்களோ அல்லது புதிய தீய ஜீன்களோ உண்டாவதாலும் இங்கிலை ஏற்படுவதாக அறிவியலறிஞாகள் கருதுகின்றனர்.

எடுத்துக்காட்டாக பிறவியைச் சார்ந்த மேகநோயை’ மரபு வழியாக இறங்கியதாகச் சொலவதில் இத்தவறு நேரிடுகின்றது. ஆனால், மேகநோய் என்றும் மரபுவழியாக இறங்கும் நோய் அன்று என்பது மெய்ப்பிக்கப்பெற்றுள்ளது. ஒரு தாய் மேகநோயால் பீடிக்கபபெற்றிருக்கும்பொழுது ஒரு குழந்தை அவளுக்குப பிறந்தால் அக் குழந்தையிடம் அங்நோய் காணப்பெறலாம்; இஃது குழந்தைக்குத் தொற்றினால் ஏற்பட்ட நோயாகும். ஒரு தாயிடம் இந்நோய் அவள் சூல்கொள்வதற்கு முன்போ, சூல்கொள்ளும்பொழுதோ அல்லது அதற்குப பினனரோ அவளது கணவனால் தொறறுமாறு செய்யப் பெற்றிருக்கலாம். அஃதாவது குழந்தை பிறந்தபொழுது அந்த

1. Lips@sou u Ft5 - Congenital. 2. குடும்பக்கூறாக உள்ளவை - Familial.

8. மேகநோய் - Syphills.