பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 வாழையடி வாழை

நோயினைத் தரும் நுண்புழுக்கள்* தாயிடம் இருந்திருக்கவேண்டும். வெள்ளை” அல்லது வேறு எந்தத் தொற்றுநோய்ககும் இது பொருந்தும்.

ஒரு தந்தை எவ்வளவு நோயுற்றிருப்பினும், மேகநோய் அல்லது வெள்ளை நோயைத் தம் குழந்தைக்கு மரபுவழியாகக் க த்தமுடியாது. அஃதாவது, அவரது விந்தணுக்கள் மூலம் இந்நோயைக் கடத்த முடியாது. விருதணுக்கள் மேகநோய் தரும் நுண்புழுக்களைத் தாங்கிக்கொண்டு செயற்பட முடியாது. எனினும், விந்துப் பாய்மத்தில்” இந்த நோயின் நுண்புழுக்கள் தங்கித் தாய் கருவுறுங்கால் அவளிடம இந்த நோய் தொற்றலாம். அதன் பிறகு குழந்தை பிறப்பதற்கு முன்னர் தாயின் வயிற்றில் வளரும் பல நிலை களிலும், அல்லது பிறக்கும்பொழுதும் தாயிடமிருந்து அக் குழந்தை அக்நோயை அடையலாம். ஆயினும், நவீன மருத்துவமுறைகளால் சூல்கொண்ட பெண்மணிகளை நன்கு கவனித்து இந்த நோய் சேயிடம் பரவாமல் தடுத்துவிடலாம். இது பல சோதனைகளால் மெய்ப்பிக்கப்பெற்றுள்ளது.

ஒரு குழந்தை மேகநோயுடன் அல்லது அந்நோயினால் ஏற்படும் பயங்கரமான கறையுடன் பிறப்பதாக வைத்துக்கொள் வோம். இந்நிலையைப் பிறவி சார்ந்ததென்று கொள்வதா அல்லது மரபுவழியாக வந்ததாக அறுதியிடுவதா என்பது புரட்டிப் பேசுவது போல் தோன்றலாம். ஆனால் இஃது அங்ஙனம் அன்று என்று வலியுறுத்தலாம். இங்கிலை மரபுவழியாக வந்ததாக அல்லாமல் பிறவி சார்ந்ததாக இருப்பின், இதனால் பாதிக்கப்பெற்ற தனியாள் கன்முறையில் வளர்ந்து அச்சமின்றித் திருமணம் புரிந்துகொள்ள லாம்; அந்த மனிதருக்குப் பிறக்கும் குழவிகளிடம் இங்கோய் இறங்காது. அஃது ஒரு நோயாக இருப்பின், அதனை எளிதில் களைந்தெறிந்துவிடலாம்; அந்நோயுடைய குழவிகளிடம் அந்நோய்

4. நுண்புழுக்கள் - Germs. 5. Qsisirsosir - Gonorrhoea.

6. Softgyi’s urtisinth – Seminal fluid.