பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 56 வாழையடி வாழை

மற்றொருவரிடம் வேறுவிதமான குறையையும் உண்டாககலாம். இதன் தாக்குதல் அவர்களிடம் வெவ்வேறு பருவங்களிலும் நிகழ

லாம்.

குறிப்பிட்ட நோய்களையும் குறைகளையும் வைத்துக்கொண்டு ஆராய்ந்தால்தான் இக்கருத்துகளில் தெளிவு ஏற்படும். இவற்றின் செயல்களைக் கண்டு நாம் மருள வேண்டியதில்லை: அஞ்ச வேண்டியதுமில்லை. இவை ஒருசில எண்ணிக்கையுள்ளவர்களையே தாக்குகின்றன. மனித இனத்தைப் பற்றும் கோய்கள் அல்லது குறைகள் யாவும் இவற்றினால் மட்டிலும் ஏற்படுவதில்லை என்பதை நாம் நினைவில் இருத்த வேண்டும்.