பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV

கண்டமை, தனிப் பெருந்தலைவர் தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவுை அவர் பிறந்த ஈரோட்டிலேயே கொண்டாடியமை, திரு. வி. க., டி. கே சி. பண்டிதமணி. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், மகாகவி பாரதியார், திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டார் போன்ற பெரியார்கட்கு நூற் றாண்டு விழா எடுத்தமை போன்ற சிலவற்றையாவது குறிப்பிட லாம். தீர்க்கமுடியாமல் கிடங்த ஆசிரியர்களின் பிரச்சினை களைத் தீர்த்தமை இவர்புரிந்த சாதனைகளுள் தலைசிறந்தது. இத்தகைய நல்லவர், வல்லவர், அடக்கமாகப்பேசி அடக்க மாகப் பணிபுரிபவர். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியது இந்த நூலின் பேறு அடியேனுடைய பெரும் பேறுமாகும். ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற உண்மையை கன்கறிந்த இப் பெருமகனாருக்கு என் கன்றி.கலந்த வணக்கம் உரியது.

பேரறிஞர் அண்ணாத்துரை அவர்கள் கான் சிறுவனாக இருந்த காலம் முதல் என் வீர வழிபாட்டுக்குரியவர். அவர் சொற்பெருக்கு தமிழகமெங்கும் பாய்ந்துகொண்டிருந்த காலம் : அது தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத் தில் தீவிரமாகப் பங்கு கொண்டிருந்த காலம். 1944இல் என்று நினைக்கின்றேன்-அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் அருந்தமிழில் ஆற்றோம் என்ற தலைப்பில் ஒரு பேருரை நிகழ்த்தினார். அதன் பெருமை தமிழகமெங்கும் அலை பாய்ந்துகொண்டிருந்தது. சிந்தனைக்கு ஆதரவு தந்துவந்த நாள், வார இதழ்கள் அதனை வானளாவப் புகழ்ந்தன. திராவிட நாடு இதழில் பேச்சு வெளிவந்ததாக நினைவு. அடுத்து. துறையூர்ப் பக்கம் அண்ணா அவர்கள் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தபொழுது கான் தலைமையாசிரியனாக இருந்த உயர்நிலைப் பள்ளியில்

7. குறள் - 1 21.