பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 22

கொடிய நோய்கள்

காலதூதர்கள் போல் வந்து மானிட இனத்தைய பற்றும்

நோய்கள் பல. இத்தகைய நோயினால் இறப்பவர்களைப்பற்றிய. செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் படிக்கின்றோம். ஆயினும்.

வாழ்க்கை நிலையை உயர்த்தியும் நவீன மருத்துவ முறைகளாலும் சில நோய்களைக் கட்டுப்படுத்திவிட்டனர் அறிவியலறிஞர்கள்.

இத்தகைய நோய்களில் மரபுவழி எங்ஙனம் பங்கு பெறுகின்றது

என்பதை நாம் அறியவேண்டும். வாழ்க்கை வசதிகள், வேறு

சூழ்நிலைகள் முதலியவை எல்லோருக்கும் ஒன்றுபோல் அமைந்தால்

தான் மரபுவழி இந்நோய்களில் எங்ஙனம் பங்குபெறுகின்றது

என்பதை நம்பகமான முறைகளில் அறுதியிடுதல் கூடும்.

பொதுவாக இந்நோய்களை அடியிற்கண்டவாறு வகைப் படுத்தலாம்.

(1) வழிவழியாக நேராக வருவன : இவற்றில் சூழ்நிலை மிகக் குறைவாகவே பங்குபெறுகின்றது. பெரும்பாலான நீரிழிவு நோய்கள், ! ஒருசில இதயநோய்கள், சில அரிய புற்றுநோய்கள்’ இவ்வகையில் அடங்கும்.:

(2) வழிவழியாக நேரல்முறையில் இறங்குவன : ஒருசில தீய ஜீன்களால் சில குறிப்பிட்ட தீங்கு பயக்கும் சூழ்நிலைகளில் இவ்வகை நோய்கள் பெருகுகின்றன. வாதம்பற்றிய” இதயநோய்கள், வேறு

1. ffifts - Diabetes. 2. புற்றுநோய் - Cancer. 8. sur 35thugstuu - Rheumatic.