பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 58 வாழையடி வாழை

சில இதயநோய்கள், பாய்குழல்பற்றிய நோய்கள் இவ்வகையுள் அடங்கும.

(3) மரபுவழிச் செல்வாக்குள்ளவை : பெரும்பாலும் எல்லாப் பெருநோய்களும் (Major diseases) இவற்றுள் அடங்கும். ஒவ்வொன்றுக்கும் முக்கியமான தகுதிகள் உள்ளன. சில தொற்று நோய்களிலும், சிலவகைப் புற்றுநோய்களிலும் ஜீன்களின் பங்கே இல்லை என்று கூறுகின்றனர்.

இந்த நோய்களைத் தனித்தனியாக விவரமாக ஆராய்ந்தால் தான் இத்துறையில் ஓரளவு தெளிவு பிறக்கும்.

(1) இதயமும் குருதிக் குழல்களும்பற்றிய நோய்கள் : இன்று மாரடைப்பால் மாண்டவர் கதைகள் அன்றாடச செய்திகளாகப் போய்விட்டன. இவ்வகை நோய்களில் உயாந்த குருதியமுக்கம்* (இரத்தக்கொதிப்பு) பாய்குழல் கடினமாதலும் தடிததுப்போதலும் (Arteriosclerosis), வாதமபற்றிய இதயநோய் ஆகியவையாகும். இவற்றில் மரபுவழிக்கூறு நேராகவோ, நேரல்முறையிலோ பங்கு பெறலாம். மேகநோய் போன்ற மரபுவழியல்லாத கூறு இதில் பங்கு கொண்டாலும், பொதுவாகத் தனியாளின பொதுவான உடலமைப் பும் இதில முக்கிய பங்கு பெறுகின்றது.

உயர்ந்த குருதிய முக்கம் வேறு நோய்களின் காரணமாக இல்லா திருந்தால், பெருமபாலும் மரபுவழி காரணமாக இருக்கலாம். பெரும் பாலும் ஒரு குடும்பத்தின் வரலாற்றினைப் பொறுததே இஃது ஏற்படு கின்றது என்று சொல்லலாம். இதற்குக் காரணமாக உள்ள தென்று யாதொரு ஜீனும் இதுகாறும் கண்டறியப்பெறவில்லை. ஆயினும் இந்நோய் வருவதற்குரிய உடல்நிலை மரபுவழிபற்றியே அமைகின்றது என்று கூறுகின்றனர். இந்தக் குருதியமுக்கம் மிகவும் கொடுமையாக இருப்பின் அஃது இருப்பவரிடம் மூன்று நிலைகளை விளைவித்தல் கூடும் :

(i) இதயநோய்கள் : இதயத்தில் வீக்கம் காணல், இதயம் செயற்படாது கின்றுபோதல், இதயத்தின் கிரீடநாடி பற்றிய”

4. உயர்ந்த குருதியமுக்கம் - Hyper tension. 5. &f LBM sq- - Coronary artery.