பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வாழையடி வாழை,

மரபுவழியாக இறங்குகின்றதாகக் கூறுகின்றனர். சில நிலைகளின் காரணமாகத் தாய்வழியாக வந்த ஒன்றும் தந்தைவழியாக வந்த ஒன்றுமாக அமைந்த பின்தங்கும் ஓர் ஒற்றை ஜீன் இணையால் இந்நோய் ஏற்படுவதாகச் சோதனை மூலம் மெய்ப்பித்துள்ளனர். ஆயினும், மருத்துவ அறிவியல் இன்னும இதற்குத் தெளிவாக விளக்கம் கூறவில்லை. செல்வர்களைவிட வறியரிடமே இந்நோய் அதிகமாகக் குடிகொண்டுள்ளது. அன்றியும், மிதவெபப நாடுகளில் தான் இந்நோய் அதிகமாவும் காணப்பெறுகின்றது.

அகன்ற வடிகுழல்கள்” என்ற நிலையால் வடிகுழல்களின் சுவர்கள் வன்மையற்றுப் போகின்றன. சிலரிடம் இங்கிலை மரபு வழியாக அமைவதுபோல் காணப்பெறுகின்றது. பெரும்பாலும் இந்நிலை பிள்ளைப்பேறு ஏற்பட்ட மகளிரையும், கின்றுகொண்டே பணியாற்றும் மக்களிடமும் அதிகமாகக் காணப்பெறுகின்றது. இந்நிலை ஏற்படுவதற்குரிய முக்கியக் காரணம் புறநிலையாக இருப்பினும், சில குடும்பங்களில் இஃது ஒர் ஒழுங்கற்ற ஓங்கிநிற்கும் ஜீனால் ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.

(2) புற்றுநோய்: இன்னும் சரியாகப் புரியாமல் மறை யாகவே இருக்கும் நோய்களுள் இது தலைமையானது. உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான மருத்துவ, அறிவியல் ஆய்வார்கள் இதனையும் இதனுடன் சேர்ந்து குழுவாக உளள நோய்களையும் ஆய்ந்து விளக்கமாக அறிந்துகொள்ள முயன்றுவருகின்றனர். மிகவும் அரிதாக உள்ள ஒருசில வகைப் புற்றுநோய்களில் மட்டிலுமே மரபுவழி பங்குபெறுகின்றது என்றும் சாதாரணமாக எங்கனும் பெருவழககாக உள்ளவற்றில் மரபுவழி பங்றுபெறுவதாகத் தெரியவில்லை என்றும் கூறுகினறனர். ஒருசில தீய ஜீன்களே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும். அவர்கள் நம்புகின் றனர். எனினும் சாதாரணப் புற்றுநோய்களில் மரபுவழியின் பங்கு இன்னும் திட்டமாக வரையறை செய்யப்பெறவில்லை. இங் நோயில் பங்குபெறும் தீய ஜீன்கள் மிகச் சிக்கலான முறையில் செயற் படுவதால் இதனைச் சரியாக அறுதியிட முடிவதில்லை.

9. Jos565rp Sulq-lpsbsir - Varicose veins.