பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடிய நோய்கள் 16

புற்றுநோய், ஒரு திட்டமான நோய் அன்று. இஃது உடல் உறுப்புகளின் அல்லது இழையங்களின் ஒருபகுதியில் துனபுறுத்தக் கூடிய ஒருவகை வளாச்சியினைக் குறிப்பது. எத்தனையோ வகை யான புற்றுநோய்கள் உள்ளன. ஒவ்வொருவகையும் வெவ்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டவை. ஆயினும், எல்லா வகைகளிலும் பொதுமையாகவுள்ள சில பண்புகள் உள்ளன : இவற்றிலுள்ள உயிரணுக்கள் இயல்பிகந்த முறையில் செயற்படுகினறன. உடற் செயல்களில் இவை தம் அருகிலுள்ள ஏனைய உயிரணுக்களுடன் ஒத்துழைப்பதில்லை. இவை வளர்ச்சியின்பொழுது எண்ணிக்கையில் பெருக்கமடைந்து தீய விளைவுகளை உண்டாக்கத் தொடங்கும் பொழுது, அண்மையிலுள்ள உயிரணுக்களையும் இழையங் களையும் தாக்கி அவற்றைச சிதைக்கின்றன. நாளடைவில் இவை கட்டுக்கடங்காமல் குருதியோட்டததுடன் கலந்து உடலெங்கும் பரவி இறுதியில் இறப்பிற்கே காரணமாகின்றன.

புற்றுநோய் உயிரணுக்கள் எப்படி உண்டாகின்றன? நாம் வாழும் சூழ்நிலையில் படிப்படியாக அல்லது திடீரென யாதாவது மாற்றம் உண்டாகி-எரிச்சலை விளைவிககும் பொருள்கள் போன்றவை -அதல்ை உயிரணுக்கள் செயற்படுவதில் கேடு கிகழ்கின்றது. இதனால் இன்று புற்றுநோயைபபற்றிய ஆராய்ச்சி உயிரணுவியலைச சாாந்துள்ளது கொள்கையளவில் புற்றுநோய் ஒருவருக்கு ஏற்படுவதோ அல்லது எளிதில் அது ஏற்படும் நிலை யினை விளைவிப்பதோ அடியிற்கண்ட பலவற்றில் ஏதாவது ஒன்றின் காரணமாக உண்டாகலாம்.

(i) ஒருசில தீய ஜீன்கள் கொண்ட உயிரணு செயற்படுவதில் கேடு நேரிடலாம். ஒருவருடைய வாழ்வில் ஒரு குறிப்பிட்ட பகுதி யில்-சிறபபாக உயிரணுக்கள் வன்மையற்றுத் தேய்ந்துபோகும் பருவத்தில் சில உயிரணுக்கள் தாமாகவோ அல்லது சில தீய கூறு களின் காரணமாகவோ சிதைய நேரிடலாம்.

10. இன்று கிட்டத்தட்ட இத்தகைய பொருள்கள் 500 வரை கண்டறியப்பெற்றுள்ளன; சில வாயுக்கள், துகள் நிறைந்த காற்று, சில வேதியியற் பொருள்கள், கதிர்வீச்சுகள் முதலியன.

வா. -11