பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வாழையடி வாழை

எளிய ஓங்கிநிற்கும் ஜீனினால் மரபுவழியாக இறங்குவதாகக் கண்டறிக்

துள்ளனர்.

(4) இருமல் நோய்’ : இன்று இந்த நோயைப்பற்றிய முழு விவரங்களும் அறியப்பெற்றுள்ளன. ஒரு காலத்தில் இது மரபு வழியாக இறங்கும் நோய் எனக் கருதப்பெற்றது. ஆனால் இன்று இந்நோய் ஒருவகை நுண்புழுவால் (Tubercle bacillus) ஏற்படு கின்றது எனறும், வாழ்ககை நிலைகள் தாழ்ந்துள்ள இடங்களில் தான் அதிகமாகப் பரவுகின்றது என்றும், இஃது ஒட்டுவாரி ஒட்டி நோய் என்றும் கண்டறிந்துளளனர். ஆனால தனிப்பட்டோரிடம் மரபுவழியாகவுள்ள உடலநிலை வேற்றுமையின் காரணமாகச் சிலரை இந் நோய் வேகமாகத தாக்குகின்றது. இதில் ஜீனின் பங்கு மிகச் சிக்கலானதாக இருககலாம் என்று ஊகிககப்பெறுகின்றது. ஆயினும் இதில் மககள் வாழும் சூழ்நிலைதான் பெரும்பங்கு பெறுகின்றது என்பது ஐயமின்றி மெய்ப்பிக்கப்பெற்றுள்ளது.

(5) தொண்டைக் கழலை : கழுத்திலுள்ள புரிசைச் சுரப்பி கள் வீங்கி உண்டாகும் இந் நோயில் மரபு வழியின் பங்கு இன்னும் ஐயத்திற்கிடமாகவே உள்ளது. நாம் உண்ணும உணவிலும் பருகும் நீரிலும அயோடின் சத்துக் குறைவாக இருப்பின் இந்நோய் உண்டா கின்றது. எனவே, சூழ்நிலைக கூறு பெரும் பங்கு பெறுகின்றது என்பது வெளிப்படை. கடலுக்குத் தொலைவான இடங்களில் அயோடின் குறைவு இவ்விடங்களில் சிலரிடம்-ஒரு குடும்பததில் ஒரு சில குறிபபிடடவர்களிடம்-இந் நோய் காணப்பெறுகின்றது. அயோடின் அதிகமாகவுள்ள இடங்களிலுள்ளவாகளிடமும் இநநோய் காணபபெறுவதால் மரபுவழியின் பங்கினைபபற்றி ஐயம் ஏற்படு கின்றது. ஒரு சில ஆய்வாளர்கள் ஓங்கி நிற்கும் ஜீனினால இந்நோய் ஏற்படுகின்றதென்றும். வேறு சிலர் பின்தங்கி கிற்கும் ஜீனினால் உண்டாகினறதென்றும் கூறுகின்றனர். ஆயினும் இச சானறுகள் இன்னும் உறுதிப்படவில்லை.

பெரும்பாலும் இந் நோய் பெண்களிடமே அதிகமாகக் காணப் படுகின்றது. மககள் தொகையில் இஃது ஓர் ஆணுக்கு வந்தால்

18. (5uns (3,5suit - Tuberculosis. 14. தொண்டைக் கழலை - Goitre.