பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 வாழையடி வாழை

குடல்வால் அழற்சி : இந்த நோய் குடிவழியாக இறங்குகின் றது என்பதற்கு யாதொரு சான்றும் இல்லை. சில குடும்பங்களில் இஃது அதிகமாகக் காணப்பெறினும், வீக்கம் தோன்றுவதற்குரிய முன் நிலையைக் குறிக்கின்றதேயன்றி மரபுவழியாக வரும் பண்பு அன்று. இத்துறையில் இன்னும் சரியான ஆய்வு முடிவுகள் காணும்வரை எந்த நோயையும் மரபுவழியாக வருகினறது எனறு சொல்லுவதற்கில்லை. தொண்டைக் கழலை, சிறுநீரக நோய், அகட்டுப் புண், குடல்வால் அழற்சி இவற்றில் மரபுவழியின் பங்கு அறுதியிடப் பெறுதல் வேண்டும். குலைக் காய்ச்சல், இருமல் நோய், மேக நோய் ஆகியவற்றில் குடிவழியின் பங்கே இல்லை. என்பது உறுதியாய்விட்டது.

16. G1-6bsursi seg hef – Appendicitis.